90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமா என்னவானார் ?

0
118439
pepsi-uma
- Advertisement -

பெப்சி உமா என்று சொன்னால் இன்றைக்குக் கூட இளைஞர்கள் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய அழகும், குரலும் ரசிகர்களை கட்டி இழுத்தது. மேலும், 90 கால கட்டங்களில் போன் பிரபலம் இல்லாத காலத்தில் கூட அதிக ரசிகர்களை கொண்டவர். அதோடு அவருடைய சிரிப்பு ,அழகு, குரல் என அவரை புகழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகும், ரசிகர்களையும் கொண்டவர். மேலும், என்றும் மாடர்ன் உடைகளை போடாதவர், அதோடு அவர் அழகாக வண்ண வண்ண புடவைகளை உடுத்தி கொண்டால் பொதும் பார்ப்பதற்கு கண்களை கவர வைக்கும். அது தான் அவருடைய கூடுதல் சிறப்பும் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இன்று வரை அவர் இடத்தை யாராலும் பூர்த்தி செய்யவில்லை. மேலும், எந்த விஜே கூட அவருடைய இடத்தை பிடிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-
Image result for pepsi uma latest photos"

- Advertisement -

மேலும், உமா அவர்கள் பிளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். அதற்கு பின்னர் இவர் முதன் முதலாக பொதிகை சேனலில் தான் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின்னர் அவருடைய பேச்சுக்கும்,அழகுக்கும் சன் டிவியில் “உங்கள் பெப்சி சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. இதை ஆரம்பித்த நாளில் இருந்தே இவருக்கு பல ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், ரசிகர்கள் உமாவிடம் பேசுவதற்காகவே பல நாட்கள் காத்து உள்ளார்கள் என்றும் சொல்வார்கள். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பெப்சி உமாவுக்கு சினிமா பிரபலங்களுக்கு இணையாக கட் அவுட் எல்லாம் வைத்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : மேஜை முழுவதும் அசைவம். வெளிநாட்டு பார்ட்டியில் நயன். அப்போ அம்மன் விரதமெல்லாம் சும்மாவா ?

அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் ஒரு ரசிகர் கூட்டம் ஒன்று பெப்சி உமாவிற்கு கோயிலைக் கட்டி உள்ளார்கள். மேலும், ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய ஒரு தொகுப்பாளரும் ‘பெப்சி உமா’ தான். மேலும், இந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை 15 வருடம் அவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா என தமிழ் சினிமா ஜாம்பவான்களுக்கு எல்லோரும் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பளித்தார்கள். ஆனால்,உமா அவர்கள் எனக்கு விருப்பமில்லை, ஆர்வம் என்று கூறிவிட்டார்.

-விளம்பரம்-
Image result for pepsi uma latest photos"

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியிலும் மிகவும் கவரப்பட்டவர் பெப்சி உமா.
அதுமட்டும் இல்லாமல் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் உமாவின் தீவிர ரசிகராம். மேலும், அந்த சிறுவன் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை உமா மட்டும் தான். அதோடு இதை அவருடைய அம்மா போனில் உமாவிடம் சொல்லி இருக்கிறாராம். இதைக் கேட்டு நெகிழ்ந்து போய் உமா அவர்கள் அந்த சிறுவனை நேரில் சந்தித்து உள்ளார். அப்போது அந்த சிறுவன் பேப்பரில் உமா என்று எழுதியுள்ளார். இந்த அளவிற்கு பிரபலமான உமா அவர்கள் தற்போது சினிமா மற்றும் டிவியில் இருந்து விலகி ஒரு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement