தமிழ் சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.
தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இதையும் பாருங்க : நடிகர் சைப் அலிகானின் மகளுடன் செல்பி எடுக்கும் போது அத்து மீறிய நபர். நடிகையின் ஷாக்கிங் ரியாக்ஷன். வைரலாகும் வீடியோ.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும்,அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன். இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் குறைந்த நிலையில் இதனை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் போது செய்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
ஆனால், சமீபத்தில் நயன்தாரா பதிவிட்ட புகைப்படம் ஒன்று நயன்தாரா விரதம் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்பது தெரியும். இந்த நிலையில் அங்கே அவர்கள் அசைவ விருந்தில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஸ்டேட்டஸ்ஸாக வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் டர்கிஷ் சிக்கன் அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நடிகை நயன்தாரா சிக்கனை வைத்து சில வேடிக்கை காட்டும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனால் அம்மன் விரதமெல்லாம் சும்மாவா என்று நயனை பலரும் நக்கலடித்து வருகின்றனர்.