பிகில் படத்தில் நடிப்பதாக இருந்த 96 நடிகை.. ஆனால், இந்த காரணத்தால் தவறவிட்டுட்டாராம்..

0
3891
bigil-96

தமிழ் திரை உலகை கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக நினைகிறார்கள்.இது ரொம்ப பெரிய விஷயம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படம் தயாரித்து உள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். அதோடு சமீபத்தில் தான் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் முடிந்தது.அது மட்டுமில்லீங்க தேவதர்ஷினி மகள் கூட பிகில் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு காரணமாக நடிக்க முடியாத சூழ்நிலை இருந்தது என்றும் தெரிய வந்தது.

96

தேவதர்ஷினி அவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர். இவர் டிவி சீரியலில் துவங்கி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும்,தேவதர்ஷினி அவர்கள் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவர்கள் கூறியது,’ நடிகை தேவதர்ஷினி அக்கா இந்தப் படத்தில் இருக்கிறார் தானே’ என்று சைகையில் அட்லீயிடம் கேட்டார். உடனே அட்லீயும் கண்டிப்பாக அவரும் இருக்கிறார் என்று கூறினார். தற்போது நடிகை தேவதர்ஷினி அவர்கள் பிகில் படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : இவர் தான் உண்மையான பிகில்.. இவருடைய ரோலில் தான் விஜய் நடிக்கிறார்..

- Advertisement -

அதில் அவர் கூறியது, மெர்சல் படத்தில் நான் நடித்து இருந்தேன். ஆனால், என்ன ? காரணம் என்று தெரியவில்லை, எடிட்டிங் செய்யும் போது நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள். ஆனால், இந்த முறை அப்படி நடக்காது என்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் கூறியிருந்தார். மேலும்,விஜய் அவர்கள் என் மீது இவ்வளவு அக்கறை வைத்து கேட்டது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அதோடு அவர் உரிமையாக என்னை “அக்கா” என்று கூப்பிட்டது எனக்கு வானத்தில் பறந்தது போல இருந்தது. மேலும், என்னுடைய மகள் நியதி விஜய் அவர்களின் ரொம்ப பெரிய ரசிகை. நானும் தான் அவரோட ரசிகை. முதல் நாள் பிகில் பட சூட்டிங்கில் நம்ம தளபதி விஜயுடன் எப்படியாவது போட்டோ எடுக்க வேண்டும்ன்னு என் மகள் நியதி ஷூட்டிங்க்கு என்னுடன் வந்து இருந்தால்.

Image result for divyadarshini daughter

ஆனால், ஷூட்டிங் நேரத்தில் விஜய் அவர்கள் ரொம்ப பிஸியாக இருந்ததால் அவருடன் போட்டோ எடுக்கவில்லை. நானும், சரின்னு சொல்லிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன். திடீரென்று விஜய் அவர்கள் என் முன்னால் வந்து நின்று, நீங்கள் நடித்த ” 96″ படத்தை பார்த்தேன். உங்களை விட உங்கள் மகள் நடிப்பு சூப்பராக இருந்தது என்று கூறினார். இதை கேட்டவுடன் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே நான், என் மகள் உங்களோடு போட்டோ எடுக்க ஆசைப் படுகிறார் என்று கேட்டவுடன், விஜய் அவர்கள் அவங்களை கூப்பிடுங்கள் என்று சொன்னார் .

அதுமட்டும் இல்லைங்க ஒரு பத்து நிமிடம் நியதியும் ,விஜய் அவர்களும் பேசி இருப்பார்கள். என் மகளுக்கு பிகில் படத்தின் புட்பால் டீம் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பத்தாவது பரீட்சை இருந்ததால் அவளால் நடிக்க முடியல. அதோடு இந்த படத்தில் என் மகள் நடிக்க முடியாதது ரொம்ப வருத்தமாக இருந்தது என்று கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் படம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்று தெரியவந்து உள்ளது.

Advertisement