இவர் தான் உண்மையான பிகில்.. இவருடைய ரோலில் தான் விஜய் நடிக்கிறார்..

0
2052
Bigil

விஜய் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நெருங்கி விட்டது என்று கூட சொல்லலாம். தீபாவளி அன்று பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்திலும், உற்சாகத்திலும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிகில் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அட்லி படத்தின் கதையை வைத்து கோலிவுட்டில் கிண்டல் செய்யும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், பிகில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியாகி சில நிமிடங்கள் கூட இருக்காது ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் “சக் தே” படத்தை ரீமேக் செய்து உள்ளார்கள் என்று தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த படம் என்னுடைய கதையில் இருந்து திருடியது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.அதுமட்டும் இல்லைங்க நந்தி சின்ன குமார் என்பவர் படத்தை காப்பிரைட் செய்துள்ளார்கள் என்று அக்டோபர் 16ஆம் தேதி தெலுங்கானா எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் Slum Soccer என்ற படத்தோடு பிகில் படம் ஒத்துப்போவதாக உள்ளது என்றும் அவர் சொல்லியிருந்தார். இப்படி இணையதளங்களில் பிகில் படம் குறித்து பல சர்ச்சைகளும் விவாதங்களும் போய்க் கொண்டேதான் இருக்கிறது.இது குறித்து தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அது என்னன்னா அகிலேஷ் பால் பற்றிய உண்மை கதை. அது என்னன்னு பாக்கலாம்.

இதையும் பாருங்க : சீரியல் குழு கொடுத்த வாக்குறுதி.. அழுகு சீரியலில் மீண்டும் இணைந்த சஹானா..

- Advertisement -

அகிலேஷ் நாக்பூரில் உள்ள சேரிப் பகுதியில் பிறந்தவர். மேலும், இவருடைய அப்பா அரசு மருத்துவமனையில் பியூன் வேலை செய்பவர். இவருக்கு இரண்டு அக்காக்கள். மேலும்,இவர்கள் கஷ்டப்படும் சூழலில் வளர்ந்தவர். அதனால் இவர் தனது எட்டு வயதிலேயே சிகரெட், சூது என தீய வழிகளில் இறங்கிவிட்டார்.அதனால் ஆறாம் வகுப்போடு தன்னுடைய பள்ளி படிப்பையும் நிறுத்தி விட்டார் அகிலேஷ். அதோடு ஏரியா பசங்களுடன் சேர்ந்து திருடுவது, ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு கூலி வேலை செய்வது போன்ற ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்துள்ளார். அது மட்டுமில்லீங்க இவர் மீது 45 வழக்குகளும் பதிவு செய்த ஒரு சின்ன லோக்கல் ரவுடி என்று கூட சொல்லலாம். இந்த மாதிரி இருக்கும் சூழ்நிலையில் இவருடைய வாழ்க்கையை மாற்றியது விஜய் பார்சே என்பவர் தான்.

மேலும், அவர் அங்கிருந்த பசங்களை வைத்து கால்பந்து விளையாட சொன்னார். ஆனால், அவர்கள் பணம் கேட்டார்கள். ஒருவருக்கு தலா ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். இது போல 15 நாட்கள் செய்து விடையாடினார்கள்.மேலும்,காசு இல்லை என்றவுடன் பால் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த பசங்க பேப்பர், துணி எல்லாம் வைத்து பால் விளையாடத் தொடங்கினார். சில நாட்கள் கழித்து போலீஸ் அகிலேஷை தேடி வந்தது. அவர் ஓடி ஒளிய முடியாமல் கோர்ட்டில் சரணடைந்தார்.பின் பாரில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால், திடீரென்று அந்த பாரையும் மூடிவிட்டார்கள். என்ன செய்வது/ என்று திகைத்து நின்ற நேரத்தில்தான் விஜய் பார்சே கைக்கொடுத்தார்.அகிலேஷ் மீண்டும் கால்பந்து விளையாடத் தொடங்கினார். அதன் பின்னர் தன்னுடைய கடின உழைப்பும், முயற்சியும் செய்தார். 2009ஆம் ஆண்டு நடந்த homeless’ வேர்ல்ட் கப் அணிக்கு தேர்வானார். அது மட்டும் இல்லைங்க அந்த டீமின் கேப்டனும் அகிலேஷ் தான்.பின்பு இந்தியாவுக்கு வந்து கோச்சாக மாறினார்.

அதோடு சேரி, சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள சிறுவர்கள் எல்லாம் கூப்பிட்டு கால்பந்து விளையாட பயிற்சி கொடுத்தார்.முழு நேர வேலையாகவே செய்ய ஆரம்பித்தார். தற்போது அமீர்கான் சத்யமேவ ஜெயதே படத்தில் ஒரு காட்சியில் வந்தார். அதன் வாயிலாகத் தான் இவர் இந்த அளவிற்கு பிரபலம் அடைந்தார் என்று கூட சொல்லலாம்.பின் திருமணமாகி தன் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் பிகில் ரியல் ஹீரோ. ஆக மொத்தத்துல ராயப்பன், மைக்கேல், பிகில் என்ற மூன்று கதாபாத்திரத்தில் கட்டாயம் நம்ப அகிலேஷ் சாயல் இருக்கும் என்பது தெரிகிறது.

Advertisement