வீட்டின் செல்லப் பிராணிக்கு திரிஷா என்று பெயர் வைத்துள்ள இயக்குனர். நடிகருடன் இருக்கும் அந்த செல்லப்பிராணியை நீங்களே பாருங்க.

0
11274
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. சமீப காலமாகவே நடிகை திரிஷா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2018 ஆம் ஆண்டு திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் திரிஷா அவர்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் தன்னுடைய பூனைக்கு திரிஷா என்று பெயர் வைத்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் பிறந்தது திருச்சியில் தான். இவர் பள்ளிப் பருவத்திலேயே போட்டோகிராபியல் மீது அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனாலேயே இவர் ஜியோகிராபியில் வேலைக்கு சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவர் எமி விருது வாங்கிய வைல்டு லைப் போட்டோகிராபர் அல்போன்ஸ் ராயிடம் சில வருடங்கள் பணியாற்றினார். பிறகு அல்போன்ஸ் ராயின் மகளையே திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படம் பாய்ஸ். இவரே ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படம் வர்ணம். அதனை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, பசங்க, எய்தவன் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். இவர் முதன் முதலாக இயக்குனராக களம் இறங்கியது 96 படத்தில் தான். தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 26 வருசமா இந்த பிரபுதேவா பாட்ட பாக்குறீங்களே. அதில் என்னிக்காவது லாரன்ஸை நோட் பண்ணி இருக்கீங்களா.

தமிழில் 2018-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடித்துள்ள “96” திரைப்படம். மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் ஆதித்யா பாஸ்கர், ஜனகராஜ், கௌரி, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்து இருந்தார். இவருடைய இசையில் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி. இந்த 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for trisha 96 director

தற்போது தெலுங்கில் 96 படத்தினை ரீமேக் செய்து உள்ளார்கள். தெலுங்கில் சமந்தா, சர்வானந்த் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் ஜானு என்று பெயரிட்டுள்ளார்கள். தெலுங்கிலும் இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் தனது பூனைக்கு திரிஷா என்று பெயர் வைத்து உள்ளார். இதை ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திரிஷாவின் மீது உள்ள பிரியத்தினால இல்ல வேற ஏதாவது காரணத்தினால் இந்த பெயரை பூனைக்கு வைத்து உள்ளாரா? என்று பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement