தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்த மணிமேகலையை பற்றி பலர் அறிய வாய்ப்பில்லை. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இந்த ஆசிரியை ஆனால் இவர் மிகவும் கவனிக்கப்பட்டது 96 திரைப்படத்தின் மூலம் தான் அந்த படத்தில் ஆசிரியையாக நடித்த இவர் நிஜ வாழ்க்கையிலும் ஆசிரியை தான் இதுவரை 35 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறாராம் மணிமேகலை.
சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் எம் ஏ ஆங்கிலம் படித்து முடித்துவிட்டு ஒரு பள்ளியில் 12 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார் இவரது மகள் பூஷிதாவும் ஒரு குழந்தை நட்சத்திர நடிகைதான் இவர்தான் அவரை எப்போதும் படப்பிடிப்புக்கு அழைத்து செல்வார் அப்படி அழைத்து செல்லும் போது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திற்காக ஆடிஷனுக்கு சென்றபோது இயக்குனர் ராம்பிரகாஷ் இவரை எதிர்பாராதவிதமாக நடிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவே இவரால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லையா ஒன்னு நடிகையாக இருக்கணும் இல்லைன்னா டீச்சரா இருக்கணும் அதனால் வேலையை விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை மணிமேகலை தற்போது முழுநேர நடிகையாக இருந்து வரும் மணிமேகலைக்கு மிகப்பெரிய அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ 96 திரைப்படம் தான்.
சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்து உள்ள மணிமேகலை, பள்ளிக்கூடத்தில் 50, 60 பிள்ளைகளுக்கு முன்னாடி நின்னு கிளாஸ் எடுத்த தானோ என்னவோ கேமரா முன்னாடி கூச்சமில்லாமல் நடித்தேன் சின்ன வயசுல இருந்து கலை நிகழ்ச்சி என்றாலே பங்கு எடுத்து விடுவேன் .அதனால்தான் கேமரா முன்னாடி நடிக்க எந்த தடையும் இல்லாமல் நடித்தேன். நான் சினிமாவில் பெரிய பிரச்சனைகளை ஒன்னும் சந்திக்கவில்லை என் பொண்ணு மூலமா தான் எனக்கு வாய்ப்பு வந்தது அதனாலேயே பூஷிதாவோட அம்மான்னு சினிமாவில் அறிமுகமானேன்.
எனக்கு எந்த தடையும் இல்லாமல் சப்போர்ட் செய்வது என் கணவர் செந்தமிழ்ச்செல்வன் தான் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது எனக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை மக்கள் மனதில் இடம் பிடிக்கிற மாதிரி நல்ல கேரக்டர் ரோல் பண்ணினாலே போதும் என்று கூறியுள்ளார் நடிகையும் முன்னாள் ஆசிரியையும் ஆன மணிமேகலை
தற்போது வைபவ் நடித்து வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பாக மணிமேகலைக்கு 2020 என்ற விருதும் வழங்கப்பட்டிருந்தது இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகையுமான மணிமேகலை. மேலும், இவருக்கு என்று சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.