முக்கிய சீரியலில் இருந்து வெளியேறிய ரிஷி கேஷவ் – இனி அவருக்கு பதில் இவர் தான்

0
12738
rishi
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று உருவானது காலத்திலிருந்து சீரியல்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை விட தொடர்களை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், பல வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை வருகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகின்ற தொடர் தான் தாலாட்டு. இந்த சீரியலில் ஸ்ருதி ராஜ் , கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை எடுத்துரைக்கும் கதைக் கருவாக தாலாட்டு அமைந்துள்ளது.

இதையும் பாருங்க : லோ ஹிப் டவுசர், வெளியில் தெரிந்த உள்ளாடை – பாக்கியலட்சுமி ஜெனியா இது ?

- Advertisement -

மேலும், இந்த தொடரில் நடிகர் ரிஷி கேஷவ் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் இந்த சீரியல் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பொதுவாகவே சீரியல்களில் நடிகர்கள் மாற்றம் செய்வது வழக்கமான ஒன்று தான். சின்னத்திரை நடிகர்கள் ஒரே சமயத்தில் பல சீரியல்களில் நடிக்கலாம் . அப்படி பல நடிகர்கள் பலர் சீரியல்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரிஷி அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் பாரதியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால், தற்போது இவர் தாலாட்டு சீரியல் இருந்து வெளியேறியுள்ளார். ஏன் இவர் சீரியலை விட்டு வெளியேறினார் என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. அவருக்கு பதிலாக இன்னொரு பிரபல நடிகர் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ரிஷி சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement