இந்த மூனு படங்களில் இருக்கும் ஒற்றுமை என்ன சொல்லுங்க – டேக் செய்த ரசிகர். லோகேஷ் கனகராஜின் குசும்பான பதில்.

0
4968
lokesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்து வருகிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதையாசிரியரும் ஆவார். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பெரிய பிரபலங்கள் இந்த படத்தில் இல்லை என்றாலும் முதல் படத்திலேயே அனைவரையும் பிரமிக்க வைத்தார் லோகேஷ்.

-விளம்பரம்-

இரண்டாவது படமான கைதியில் ஒரே இரவில் நடைபெறும் கதையை எந்த ஒரு குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் பல சுவாரசியத்துடன் தந்துள்ளார். அதற்கு பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பிரம்மாண்ட அளவில் இயக்கி மாபெரும் சாதனை படைத்தார். தற்போது ஒரே படத்தில் இந்தியாவின் மிக பிரபலமான கலைஞர்களான கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை விக்ரம் படத்துக்காக இயக்கிக் கொண்டு இருக்கின்றார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் அவர்கள் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கு என்று சொல்லி உள்ளார். அதற்கு என்ன என்று லோகேஷ் கேட்டு உள்ளார். மூன்று படங்களுமே கமல் படங்களை முன்னுதாரணமாக கொண்டு உருவானது என்றும் மாநகரம் படத்தில் சந்தீப் பேருந்தில் இருந்து குதித்து இருப்பார்.

கைதி படத்தில் கார்த்தி லாரியிலிருந்து குதித்தார், மாஸ்டர் படத்தில் விஜய் ஆட்டோவில் இருந்து குதித்தார் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்கள். இன்னும் சிலரோ இந்த 3 படங்களில் இருக்கும் பல்வேறு ஒற்றுமைகள் குறித்து ட்வீட் போட்டு வருகின்றனர். தற்போது இந்த பதிவுகள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement