8 வருட நட்பு, மருத்துவனையில் இருந்த தன் தந்தைக்கு உதவியுள்ள விஜய். பிரபல நடிகர் உருக்கம்.

0
1577
Balaji
- Advertisement -

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் தங்களுடைய நடன திறமையை பிக்பாஸ் ஜோடிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே தாடி பாலாஜி– நிஷா ஜோடி தான் மக்கள் மனதையும், நடுவர்களின் மனதையும் கவர்ந்து உள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இவர்களை விட வயது குறைவான, நல்ல நடனம் தெரிந்த போட்டியாளர்கள் இருந்தாலும் தாடி பாலாஜி –நிஷா ஜோடிதான் பலரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

-விளம்பரம்-
Free Download Mp3 songs Thullatha Manamum Thullum Tamil Movie | Thodu Thodu  Video Song | Vijay | Simran | SA Rajkumar Free Audio , 120kpbs, 320kpbs,

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பாலிவுட் ரவுண்ட் நடக்க இருக்கிறது. அதாவது ஏற்கனவே வெள்ளித்திரையில் ரிலீசாகி கோலாகலமாக கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து மீண்டும் மேடையில் நடனத்தின் மூலம் காட்சிப்படுத்த வேண்டும். இந்த ரவுண்டில் தாடி பாலாஜி– நிஷா இருவரும் விஜய்யின் கில்லி படத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், இது குறித்த ப்ரோமோ கூட தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : நடிகர் விவேக் மரணம் முக்கிய முன்னுதாரணம் – இனி தடுப்பு போடும் முன் இது கட்டாயம். தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

- Advertisement -

அதில் தாடி பாலாஜி தளபதி விஜய் குறித்து பல தகவல்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ஆங்கர் ஈரோடு மகேஷ் அவர்கள் தாடி பாலாஜி இடம் ஏன் நீங்கள் கில்லி டத்தை தேர்வு செய்தீர்கள்? என்று கேள்வி கேட்டார். அதற்கு தாடி பாலாஜி கூறியது, விஜய்யுடன் ஆரம்பகால படமான நிலாவே வா, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் என பல படங்களில் நண்பராக நான் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக நான் விஜய் உடன் பணி புரிந்துள்ளேன்.

ஷூட்டிங் முடிந்தால் கூட நான் விஜய் உடனே இருப்பேன். அந்த நேரத்தில்தான் ஒரு முறை என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. நாங்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது நான் விஜய்யுடன் சூட்டிங்கில் தான் இருந்தேன். நான் மிக டென்ஷன் ஆக இருப்பதை பார்த்த விஜய் எனக்கே தெரியாமல் தனது உதவியாளர்கள் மூலம் எனக்கு என்ன பிரச்சினை என விசாரித்து தெரிந்துகொண்டார். பிறகு என்னிடம் சொல்லாமலேயே ஒரு லட்சம் ரூபாயை என் தந்தையின் மருத்துவ செலவுக்கு உதவி செய்திருக்கிறார் என்று கண்ணீர் மல்க பாலாஜி பகிர்ந்துள்ளார். தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வை முழுமையாக பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement