விஜய் மகனுக்குக் கொடுக்கப்படும் ரகசிய பயிற்சிகள், SACயின் சப்போர்ட், விஜய் போட்ட முக்கிய கண்டிஷன்.

0
341
Sanjay
- Advertisement -

சினிமாவில் களம் இறங்க விஜய் மகனுக்கு ரகசியமாக பயிற்சிகள் கொடுக்கப்படும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் அடங்கிய படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால், இதுவரை விஜய் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை என்று கூறப்படுகிறது.

தளபதி 67 படம்:

இதனால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு மீது இருக்கிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் மகன் சினிமாவில் களம் இறங்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய்யின் மகன் சஞ்சய்:

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் விஜய் படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற குறும்படம் ஒன்று வெளியாகி இருந்தார். மேலும், சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்து இருக்கிறார். அவர் அடுத்ததாக சினிமாவில் களம் இறங்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது சினிமாவில் களம் இறங்க இருக்கும் விஜய் மகனுக்கு ரகசியமாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் களம் இறங்கும் விஜய் மகன்:

தற்போது சஞ்சய் தீவிரமாக நடிப்பு பயிற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்கு விஜய் முழு ஆசீர்வாதமும் வழங்கி விட்டார். முதலில் நடத்தினதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். அதற்காக வீட்டில் வந்து பயிற்சி அளிக்கிறார்கள். அப்படி பயிற்சி அளிக்கும் நபர் வெளியே இந்த செய்தியை கசிவிடக் கூடாது என்று கண்டிஷனும் போட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து வசனங்களை உச்சரிக்கும் பயிற்சி சொல்லிக் கொடுக்கப் போகிறார்களாம். இதன் பொறுப்பை சஞ்சயின் தாத்தா எஸ் சி எஸ் சி ஏற்றுக் கொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் கூடிய விரைவில் விஜய்யின் மகனை வெள்ளித்திரையில் காணலாம்.

Advertisement