புகைப்படத்தில் இருக்கும் மாஸ்டர் பட நடிகை யார்னு தெரியதா ?

0
1896
andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருக்கும் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் இங்கிலிஷ் டைலாக்கிற்கு பேமஸ்சான இயக்குனர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

-விளம்பரம்-
andrea

மேலும், நடிகைக்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் ஒல்லி நடிகர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

மேலும், ஒல்லி நடிகர் படத்தில் இவர் அந்த இயக்குனர் மற்றும் நடிகருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . அந்த படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் .

அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement