சமீபத்தில் இதுபற்றி அவர் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில் 'பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததும், ரசிகர்கள்கிட்ட இருந்து எனக்கு வாட்ஸ்அப் மெசேஜ்கள் வந்துச்சு. அதையெல்லாம் வெச்சு ஒரு புத்தகமே எழுதலாம். என் நிறை குறைகளை மக்கள் தெளிவா விளக்கங்களோட எழுதியிருந்தாங்க.
ஒரு தொலைக்காட்சி நிகழ்வு ஒரு மனிதனை இவ்வளவு மாற்றியிருக்குனு நினைக்கும்போது ஆச்சர்யமா இருக்கு. நான் இதுவரை ஒரு பிக் பாஸ் எபிசோட்கூட பார்க்கலை. இனிமேலும் பார்க்க மாட்டேன்னு என் தாய்மேல சத்தியமா சொல்றேன்' என்று கூறியுள்ளார்.
தற்போது 'பொம்மி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளாராம். இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங் நடந்து வருகிறதாம், விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் கவிஞர் ஸ்னேகன் தெரிவித்துள்ளார். அது போக இன்னும் 3 படங்களில் ஹீரோவக கமிட் ஆகியுள்ளாராம்.




