தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான ஏ.எல்.அழகப்பனின் மகன் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா, சைவம்’ போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யின் சகோதரர் தான் உதயா. இவர் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2000-யில் தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘திருநெல்வேலி’. இதில் ஹீரோவாக பிரபு நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் பாரதி கண்ணன் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் நடிகர் உதயா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் உதயா நடிகராக அறிமுகமான முதல் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து நெப்போலியனின் ‘கலகலப்பு’ என்ற படத்தில் நடித்தார் உதயா. ‘கலகலப்பு’ படத்துக்கு பிறகு ‘உன்னை கண் தேடுதே, பூவா தலையா, ரா ரா, தலைவா, ஆவி குமார், உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் சில படங்களில் உதயா ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
இதையும் பாருங்க : பப்லியான லுக், பாவாடை தாவணி, கோவிலில் பஜனை. மணிமேகலையா இது. பாத்தா நம்ப மாட்டீங்க.
ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவா’ திரைப்படம் நடிகர் உதயாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், அந்த படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். திரை உலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். அந்த திறமையை காண்பித்து சாதனை படைக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அன்றாட வாழ்க்கையில் இருந்தே அந்த போராட்டம் என்பது துவங்கும், அதை எல்லாம் மீறி தான் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
இதையும் பாருங்க : நேற்று தனி ஒருவன் படத்தை பார்த்துவிட்டு டைரியை காண்பித்துள்ள மோகன் ராஜாவின் மகள் – அப்படி என்ன எழுதி வைத்துள்ளார் பாருங்க.
ஆகையால், பல துணை நடிகர்களின் நிலையும் கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. இந்நிலையில், நடிகர் உதயா நேற்று (ஏப்ரல் 22-ஆம் தேதி) தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் 60 பேருக்கு, 15 நாட்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.