மீடியா துறையில் தொகுப்பாளினியாக என்ட்ரியானவர் மணிமேகலை. இவர் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் மியூசிக்’-யில் தான் முதன் முதலாக சேர்ந்து பணியாற்றினார். 2010-ஆம் ஆண்டு சன் மியூசிக் சேனலில் ‘சூப்பர் ஹிட்ஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை மணிமேகலை தான் தொகுத்து வழங்கினார். இது தான் அவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியாம். அதன் பிறகு ‘ஃப்ரேன்க்கா சொல்லட்டா, ஃப்ரீயா விடு, ஹாட் சீட், OMG, ப்ளாக், வெட்டி பேச்சு, கோலிவுட் டைரீஸ்’ போன்ற பல நிகழ்ச்சிகளை சன் மியூசிக் சேனலில் தொகுத்து வழங்கினார் மணிமேகலை
இவர் சன் டிவி மற்றும் சன் நியூஸ் ஆகிய இரண்டு சேனல்களிலுமே சில திரையுலக பிரபலங்களை இன்டர்வியூ எடுத்திருக்கிறார். அதன் பிறகு சன் நெட்வொர்க்குடன் தனது மீடியா பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த மணிமேகலை, அடுத்ததாக முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவிக்குள் நுழைந்தார். விஜய் டிவி-யில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’-யின் சீசன் 2-வை மணிமேகலை தான் தொகுத்து வழங்கினார்.
இதையும் பாருங்க : அஜித், விக்ரம் என பல நடிகர்களிடம் கேட்டேன். ஜீவா படத்தின் அனுபவத்தை பகிர்ந்த இயக்குனர்.
தொகுப்பாளினியாக மட்டுமின்றி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘MR & MRS சின்னத் திரை’ என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் பங்கேற்றார் மணிமேகலை. இப்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் ‘Cooku With கோமாளி’ என்ற நிகழ்ச்சியிலும் மணிமேகலை ஒரு போட்டியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிமேகலைக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, மணிமேகலை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அப்புகைப்படத்துடன் ஒரு ஸ்டேட்டஸும் போட்டிருக்கிறார்.
இதையும் பாருங்க : நேற்று தனி ஒருவன் படத்தை பார்த்துவிட்டு டைரியை காண்பித்துள்ள மோகன் ராஜாவின் மகள் – அப்படி என்ன எழுதி வைத்துள்ளார் பாருங்க.
அந்த ஸ்டேட்டஸில் “நான் தான் அப்பவே சொன்னேன்ல.. நான் ஒரு வருஷமா பாட்டு கிளாஸுக்கு போனேன்னு.. யாராவது நம்புனீங்களா.. இப்போ ப்ரூஃப்போட வந்திருக்கேன். இந்த புகைப்படம் 2009-ஆம் ஆண்டு அசோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எடுத்தது. கிரீன் ஹாஃப் சாரி காஸ்டியூம்ல இருக்கிறது நான் தான்.. எவளோ நல்லா பாடியிருந்தா.. என்ன முதல் ரோவில், அதுவும் மைக் முன்னாடி உக்கார வைச்சிருப்பாங்க.. நான் பாடகி மணிமேகலை” என்று மணிமேகலை தெரிவித்திருக்கிறார்.