13 ஆண்டுக்கு முன் தான் ஹீரோவாக நடித்த படத்திற்காக ஆட்டோ ஒட்டி ப்ரோமஷன் செய்த யாஷ், ஆனா வந்தது இத்தனை பேர் தான். வைரலாகும் வீடியோ.

0
641
Yash
- Advertisement -

ஓட்டுநரின் மகன் தான் இன்று பேன் இந்தியா ஸ்டாராக சினிமாவில் கால் தடம் பதித்த யாஷ் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
Reporters Questioned Yash For His Delay| யாஷ் அல்லு அர்ஜுன்

அதுமட்டும் இல்லாமல் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இந்த படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் இந்தபடம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இதனால் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பில் பாதிப்பு ஏற்பட்டதால் சிலகாலம் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : ” நீங்க பேசுறத வண்மையா கண்டிக்கிறேன்” விஜய், அஜித் விவகாரம் – மேடையில் மோதிக்கொண்ட அமீர் மற்றும் அருண் பாண்டியன்.

- Advertisement -

கே ஜி எஃப் 2 படம் பற்றிய தகவல்:

பின் கட்டுப்பாடுகள் முடிவடைந்த உடனேயே மீண்டும் வேகவேகமாக கேஜிஎப் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், 3 ஆண்டுகள் கழித்து கே ஜி எஃப் படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கே ஜி எஃப் 2 படம்:

மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் நேற்று கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. அதோடு பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2 படம் வெளியானது. படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் காப்பாற்றினாரா? என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

யாஷ் பற்றி தெரியாத தகவல்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் படத்தை ஓரங்கட்டி கே ஜி எஃப் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், கேஜிஎப் 2 படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெரும்பாலான வசனங்களை நடிகர் யாஷ் தான் சொந்தமாக எழுதியுள்ளதாக இயக்குனர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் ஒரே படத்தின் மூலம் பேன் இந்தியா ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் யாஷ். இந்நிலையில் யாஷ் கடந்து வந்த பாதையைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகர் யாசின் இயற்பெயர் நவீன்குமார் கௌடா. இவருடைய நிக் நேம் தான் யாஷ். அதுவே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

யாஷ் தந்தை செய்த வேலை:

யாஷ் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்கத் துவங்கியுள்ளார். இவர் முதலில் நடித்த சீரியல் நந்தகோகுலா. பிறகு சினிமாவில் துணை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தது கே ஜி எஃப் படம் தான். இப்படி ஒரு நிலையில் இவர் ஹீரோவாக நடித்த 2ஆம் படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் ஆட்டோ ஓட்டி கவனத்தை ஈர்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனாலும், அந்த படத்தின் ப்ரோமஷன் போது வெறும் 40 பேர் மட்டுமே வந்துள்ளார்.

yahs22

ப்ரோமோஷனுக்காக ஆட்டோ ஒட்டிய யாஷ் :

ஆனால், இப்போது யாஷ்ஷிற்கு கன்னட சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுகு, மலையாளம் என்று பல மாநிலங்களிலும் ரசிகர்கள் சேர்ந்து தற்போது ஒரு pan இந்தியா ஸ்டாராக இருக்கிறார் யாஷ். மேலும், இவருடைய தந்தை கன்னட அரசு பேருந்தின் ஓட்டுனர் ஓட்டுனராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஓட்டுனரின் மகன் தற்போது பேன் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ள தகவல் சோசியால் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement