” நீங்க பேசுறத வண்மையா கண்டிக்கிறேன்” விஜய், அஜித் விவகாரம் – மேடையில் மோதிக்கொண்ட அமீர் மற்றும் அருண் பாண்டியன்.

0
653
arunpandian
- Advertisement -

அஜித்-விஜய்யால் தான் தமிழ் சினிமாவே பின்னுக்கு செல்கிறது என்று அருண் நடிகர் அருண்பாண்டியன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதி, தயாரிப்பாளரும் ஆவார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன்.

-விளம்பரம்-

பின் “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியனுக்கு சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை,ஜூங்கா போன்ற பல்வேறு படங்களை தயாரித்தார் அருண் பாண்டியன். சமீபத்தில் இவர் தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அருண்பாண்டி அவர்கள் கருணாஸ் நடித்த ஆதார் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட சீரியல்கள், விஜய் டிவிக்கு கும்புடு போட்டு சரண்யா எடுத்துள்ள முடிவு (இதாவது நிலைக்கட்டும்)

- Advertisement -

விழாவில் அருண்பாண்டியன் பேசியது:

இந்த விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட அருண்பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவின் நிலை குறித்து கூறி இருப்பது, நாங்கள் திரைப்படத்தில் நடிக்கும் போது 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக பெறுவோம். 90% படத்திற்காக செலவழிப்போம். பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் இருந்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம். தற்போது தமிழ் சினிமா மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படத்தின் பட்ஜெட்டில் 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் நிலை குறித்து கூறியது:

மீதி உள்ள 10 சதவீதம் மட்டும் தான் படத்திற்கு செலவழிக்கப்படுகிறது. இப்படி இருந்தால் தமிழ் சினிமாவின் நிலை எப்படி உயரும்? மேலும், தமிழ் சினிமா தரமற்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அண்டை மாநிலங்களில் உருவாக்கப்படும் பல திரைப்படங்கள் எல்லாம் தமிழகத்தில் வசூலில் வாரி குவித்து வருகிறது. இதனால் சமீபத்தில் வெளிவந்த அஜீத்-விஜய் படங்கள் எல்லாமே தோல்வி அடைந்ததற்கு காரணம். விஜய், அஜித் அதிகமாக சம்பளம் வாங்குவது தான் தமிழ் சினிமா பின்னுக்கு உள்ள காரணம் என்று அருண்பாண்டியன் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-
valimai

அமீர் அளித்த பேட்டி:

இப்படி இவர் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனை பார்த்த இயக்குனர் அமீர் அவர்கள் மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, RRR மட்டும் கேஜிஎஃப் படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடைபோடுவது சரியானதாக இருக்காது. அருண்பாண்டியன் அவர்கள் விஜய், அஜித் படங்களை பற்றியும், அவர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றியும் கூறினார். நான் அதை பற்றி பேசவில்லை. தமிழ் சினிமா பின்தங்கி இருப்பது என்று கூறுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தமிழ் சினிமா குறித்து ராஜமௌலி சொன்னது:

தமிழ் சினிமா ஒருநாளும் பின்நோக்கிச் செல்லாது. நல்ல கதையம்சம் கொண்ட உலகத் தரம் வாய்ந்த படங்கள் தமிழில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிற்கே தமிழ் சினிமா தான் முன்னோடியாக உள்ளது. அதோடு RRR படத்தின் புரமோஷனுக்காக வந்த ராஜமௌலி கூட தமிழ் மொழி தான் எங்களுடைய தாய் வீடு என்றும், தமிழ் படங்கள் மூலம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இப்படி அருண் பாண்டியன் மற்றும் அமீர் இருவரும் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement