சமீபத்தில் சர்கார் படத்தின் கதை தன்னுடையதுஎன்று வருண் ராஜேந்திரன் தெரிவித்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் சென்றார். வழக்கில் வெற்றியும் பெற்றார். கதை ஏ.ஆர். முருகதாஸ் உடையது அல்ல என்பது உறுதியானது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கத்தி’ படம் வெளியான போதும் ரங்கதாஸ் என்பவரும் அவரை அடுத்து கோபி நாயர் என்பவரும் கத்தி படத்தின் கதை தங்களுடையது என்று உரிமைகொண்டாடினார். இருப்பினும் படம் எந்த ஒரு சலனமும் இல்லாமல் வெளியாகியது.
இதைதொர்ந்து குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர் ‘கத்தி ‘ திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என்றும் தாகபூமி என்ற குறும்படத்தை தான் எடுத்ததாகவும் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
குடும்பத்துடன் உண்ணா விரதம் இருந்து வரும் அன்பு ராஜசேகர்:
அத்தோடு அந்த குறும்படத்தில் டெல்டா விவசாயிகளின் கஷ்டங்களை மையமாக வைத்து ராஜசேகர் எடுத்து இருந்தார். அந்தக் கதைதான் கத்தி படமாக எடுக்கப்பட்டுள்ளது என்று பல காலமாக கூறிவந்த நிலையில் இன்று இயக்குனர் அன்பு ராஜசேகர் நீதி கேட்டு குடும்பத்துடன் உண்ணா விரதம் இருந்து வருகிறார்.