தவறு செய்தவர்களுக்கு என் படத்தில் இனி வாய்ப்பு இல்லை..!ஏ ஆர் ரகுமான் அதிரடி முடிவு..!

0
1035
ar-rahman
- Advertisement -

பின்னணி பாடகி சின்மயி மற்றும் வைரமுத்து #metoo விவகாரம் தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. பாடகி சின்மயி, வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்த பின்னர் பல்வேறு நடிகைககளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

A R rahman

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் #metoo விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், நான் #metoo விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.நம்ப முடியாத பலரது பெயர்கள் வெளியாகி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இந்த துறையை ஒரு பாதுகாப்பான துறையாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.என்னுடன் பணியாற்றும் போது என்னுடைய என்னுடைய சூழலை பாதுகாப்பான சூழலாக தக்க வைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ ஆர் ரகுமான், வைரமுத்து எழுதி கொடுத்த பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதே போல பாடகி சின்மையும், ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.எனவே, தற்போது #metoo விவகாரத்தில் சிக்கியுள்ள சின்மைக்கும், வைரமுத்துவிற்கும் இனி ஏ ஆர் ரகுமான் வாய்ப்பளிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு சம்பவத்தை பற்றி ரகுமான் கேள்விபட்டபோது ‘இது உண்மையா ‘ என்று என்னிடம் கேட்டார். பல்வேறு பாலியல் தொல்லைகளில் ரகுமானின் பெயரை பயன்படுத்தி பெண்களுக்கு வலை வரித்தார்கள் என்று ஏ ஆர் ரகுமானின் சகோதிரி ரெஹெனா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement