கடந்த சில காலமாக சமூக வலைதளத்தில் பல மீம்களும் ட்ரெண்டாகி வருகிறது. அதுவும் மோடி பதவி ஏற்ற நிகழ்வை ட்விட்டரில் ட்ரெண்ட்டாக விட கூடாது என்பதற்கு பல மீம்களை உருவாக்கி வருகின்றனர் என்று பா ஜ காவினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் #Prayfornesamani என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்தது. மோடி பதவியேத்த போதும் இந்த ஹேஷ் டேக் தான் முதல் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் #TNAgainstHindiImposition, ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது.
இதற்கு முக்கிய காரணமே, நாடுமுழுவதும் நடுநிலை வகுப்பு முதல் மும்மொழிக்கொள்கை அமலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து டுவிட்டரில் #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பஞ்சாபிலும் தமிழ் பரவுவதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் மரியான் பட பாடலை பஞ்சாபி ஒருவர் பாடும் வீடியோவையும் இணைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு வலுக்கும் நிலையில் சரியான டைமிங் தலைவா என்று ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி வருகின்றனர்.