‘தகாத உறவில் ஈடுபட சொல்கிறார்’ – அதிமுக முன்னாள் முதல்வரின் மகன் மீது டிஜிபியிடம் இளம் பெண் பரபரப்பு புகார்.

0
916
- Advertisement -

எம் பி ரவீந்திரநாத் மீது குற்றச்சாட்டு டிஜிபி சந்தித்து புகார் அளிக்க வந்த பெண்மணி. முன்னாள் முதலமைச்சர் ஒ. பண்ணீர்செல்வதின் மகன் தேனீ பாராளுமன்றதின் எம்.பி ஓ பி ரவீந்திரநாத். இவர் அதிமுக கட்சி சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் அதிமுக கட்சியில் நடந்த உட்கட்சி புசல்களால் அவர் கட்சியில் இருந்து நீக்க பட்டதாக அறிவிப்பு வெளியானது. தற்போது சில மதங்களுக்கு முன் அவரது எம்.பி பதவி செல்லாது என்று உயர்நீதி தீர்ப்பு அளித்தது. இருப்பினும் அவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் காயத்திரி தேவி என்ற பெண் கூறுகையில் ஓ பி ரவீந்திரநாத் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் எனவும் அநாகரீகமாக செயல் குறித்தும் தமிழக காவல் இயக்குனர் சங்கர் ஜிவலை சந்தித்து புகார் மனுவை அளிக்க வந்தார்.     

-விளம்பரம்-

காயத்திரி தேவி கூறுகையில்,

நங்கள் முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குடும்பத்துடன் பத்து ஆண்டுகளுக்கு மேல் குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறோம். ஓ பி. ரவீந்திரநாத் எனக்கு உடன் பிறக்காத அண்ணன் போல் நட்பாக பழகி வந்தோம். எனக்கு ஒ.பி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி என்னுடைய தோழி. ஆனந்தியின் மூலம் எனக்கு அந்த குடும்பத்தில் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் மற்றொரு தோழியான மலருக்கு விவாகரத்து ஆன நிலையில் அவர் மீது தகாத உறவில் இருந்து வந்தார் எனவும் அந்த பெண் காயத்ரி தேவி கூறினார்.    

- Advertisement -

மேலும் கூறிய காயத்ரி தேவி, எனக்கு 2021 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனதை தெரிந்து கொண்டு அவரின் நண்பர் மூலம் ஆபாசமாக பேச தொடங்கினர் அவரின் நண்பர். அவரின் நண்பர் கூறுகையில் ஓ பி ரவீந்திரநாத் உன் மீது ஆசைபடுவதாகவும் அவரின் நண்பர் கூறினார் என்றும் அந்த பெண் கூறினார். இதை பற்றி நான் அவரின் மனைவியிடமும் கூறியிருந்தேன் என்றும் காயத்ரி தேவி கூறினார். அதன் பிறகு ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அவரின் தொலைபேசி என்னில் இருந்து கால் வந்ததும் நான் எடுத்து பேசினேன் ஆரம்பத்தில் நன்றாக பேசி கொண்ட இருந்த நிலையில் அதன் பிறகு ஆபாசமாக பேச தொடங்கினார்.

நீ என்னுடன் வந்து விடு நான் உன்னை ராணி போல் பார்த்து கொள்கிறேன், மலர் போல உன்னையும் பார்த்துகொள்கிறேன் என்றும் அவர் பேசினார் என்று அந்த பெண் கூறினார். கார் அனுப்பிகிறேன் அதில் வா என்றும் அவர் மிரட்டினார், அதன் பிறகு கூறிய அந்த பெண், நீங்கள் எனக்கு ஒரு அண்ணன் போல எனவும் நீங்கள் இவ்வாறு பேச கூடாது என கூறினேன் அதற்க்கு அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் என்னிடம் கூறினார் எனவும் அப்பெண் கூறினார்.

-விளம்பரம்-

பொறுமையை இழந்த அந்த பெண் நீங்கள் குடித்துவிட்டு பேசினால் தாயுக்கும் தங்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆகிவிடுமா என்றும் அந்த பெண் கோபமாக கூறினார். நீங்கள் அதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த பெண் வாட்ஸ் ஆப்பில் கூறியுள்ளார் அதற்க்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றும் அந்த பெண்மணி கூறினார். இது கூறித்து ஒ பி எஸ் அவர்களிடம் கூறிய போது ஒ.பி ரவீந்திரநாத் அவன் அம்மா திதிக்கு கூட அவன் வரவில்லை நன் எப்படி அம்மா அவரிடம் பேச  முடியும் என்றும் அவர் கூறியதாக அந்த பெண் கூறினார்.

இன்று எனக்கு நடைபெறுவது நாளைக்கு என் குழந்தைக்கும் நடக்கலாம் என்று காயத்ரி தேவி கூறினார். இது தொடர்பான வாட்சப் சாட்டுகள் தனக்கு தொலைபேசி அழைப்புகள் ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் செய்தியளார்கள் முன்பு காட்டினார். இது குறித்து ஏற்கனவே கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று டிஜிபி சந்தித்து புகார் அளிக்க வந்தேன், ஆனால் இன்று டிஜிபி சந்தித்து புகார் அளிக்க முடியவில்லை, 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு வருமாறு கூறியிருக்கிறார்கள்.

Advertisement