இந்த சீன் வரும் போது என்ன பண்ணீங்க – லியோ டிரைலரை பார்த்தபடி வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்ட பதிவிற்கு ரசிகர்கள் கேள்வி

0
1838
- Advertisement -

லியோ படத்தின் டிரைலரை பகிர்ந்த வானதி சீனிவாசன். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.

Leo Trailer

இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. ‘பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பலர் நினைப்பது போல இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்றும் கூறி இருந்தது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் லியோ படத்தின் Badass பாடலை வெளியீட்டு ரசிகர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தியது படக்குழு. இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இதனை தொடர்ந்து லியோ படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

இப்படி ஒரு நிலையில் படக்குழு அறிவித்து இருந்தது போல இன்று மாலை 6.30 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. எதிர் பார்த்தது போலவே லியோ படத்தின் ட்ரைலர் Action Packed ட்ரைலராக அமைந்து இருக்கிறது. பொதுவாக விஜய் படத்தின் பாடல்களும் ட்ரைலர்களும் யூடுயுப் ஏதேனும் ஒரு சாதனையை படைத்து விடும். அந்த வகையில் லீயோ படத்தின் ட்ரைலர் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

டிரைலரை பார்த்த MLA

லியோ படத்தின் டிரைலரை பாஜக எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான சீனிவாசன் தனது வீட்டில் பார்த்ததை வீடியோ எடுத்து x தளத்தில் பதிவேற்றியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது விஜய் ரசிகர்களை கவருவதற்காக தான் வானதி சீனிவாசன் இவ்வாறு செய்கிறார் என்ற சர்ச்சைகளும் கிளம்பி தான் கொண்டிருக்கிறது. அதற்க்கு அவரின் பதிவிற்கு கீழ் பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement