நடிகர் சங்கத்துக்கு மீட்டு கொண்டுவந்த கேப்டனுக்கு தற்போதைய நடிகர் சங்கம் என்ன செய்தது ? பிரபலத்தின் பளார் கேள்விகள்.

0
651
- Advertisement -

விஜயகாந்தின் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத பிரபலங்களை அரசியல் விமர்சகர் மாரிதாஸ் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. நேற்று மாலை விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..

- Advertisement -

மாரிதாஸ் வீடியோ:

லட்சக்கணக்கான மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர் சூர்யா ஆகியோர் நேரில் வரவில்லை. இந்நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர் மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒட்டுமொத்தமாக மரியாதை செலுத்தும் இடத்தில் நான் யாரை பார்க்க நேர்ந்தது என்றால் தென்னிந்திய சண்டை பயிற்சியாளர்கள் சங்கத்திலிருந்து கூட்டமாக வந்து விஜயகாந்த்க்கு மரியாதை செலுத்தி இருந்தார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் குறித்து சொன்னது:

தென்னிந்திய நடிகர் சங்கம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அடிக்கடி டிவியில் கூட நடிகர் சங்க தேர்தல் என்று செய்திகள் வரும். அந்த நடிகர் சங்கம் ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை. அதற்கு எதற்கு சங்கம்? எவனாவது தென்னிந்திய நடிகர் சங்கம் என்று சொன்னால் நான் வெளுத்து வாங்கி, மரியாதை கெடுத்து விடுவேன். இந்த சங்கம் உருவானதற்கு முக்கிய காரணமே நடிகர் விஜயகாந்த் தான். அவர் இல்லை என்றால் இந்த நடிகர் சங்கம் என்ற ஒன்றே கிடையாது.

-விளம்பரம்-

நடிகர்களை வெளுத்து வாங்கிய மாரி:

நடிகர் சங்கத்தின் நலத்திட்டங்கள், மக்களுக்கு உதவி இதெல்லாம் இருக்கிறது என்பதை விஜயகாந்த் தான் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட மனிதருக்கே மரியாதை செலுத்த முடியாத அளவிற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் வரவே இல்லை. எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டு வருந்துகிறேன் என்று வீடியோ போட்டு இருக்கிறார். நீ வெளிநாட்டில் இருந்தால் என்ன? அவருடைய மறைவிற்கு வந்து செல்ல முடியாத இடத்திற்காக சென்றிருக்கிறாய்? பின் பொருளாளராக இருக்கும் கார்த்தி ஒரு கடிதத்தில் விஜயகாந்த் நல்லவர். வல்லவர்.

வடிவேலு குறித்து சொன்னது:

அவர் இறப்பிற்கு வருந்துகிறேன் என்று கூறியிருக்கிறார். இது கூட பரவாயில்லை அவருடைய அண்ணன் சூர்யா, ஒரு மனிதனுக்கு அஞ்சலி செலுத்த ஒரு இரண்டு நிமிடம் கூட செலவிட முடியாத அளவிற்கு ரொம்ப பிஸியாக இருக்கிறார். ஓடும் காரிலேயே இரங்கல் பேசி இருக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதோடு நான் இந்த வீடியோ போட்டதற்கு முக்கிய காரணம் வடிவேலு தான். அவர் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு ஒரு காரணம் விஜயகாந்த் தான். ஆனால், அவருடைய இறப்பிற்கு கூட அவரால் வர முடியவில்லை. ஆனால், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது இவர் செய்தியாளர்களை சந்தித்து, திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பேசி இருக்கிறார். இவர் எல்லாம் என்ன மனுஷன்? என்றே தெரியவில்லை.

Advertisement