பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல பேர் பிரபலமான நடிகையாகி இருக்கிறார்கள். ஆனால், சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பிறகு என்ன ஆனார்கள்? என்று தெரியாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் ஆதி படத்தில் சின்ன வயது திரிஷாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுசித்ரா. அதனை தொடர்ந்து இவர் சினிமா, சீரியல் என்று பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். பின் படிப்பிற்காக பிரேக் எடுத்தார். அப்படியே இவருக்குத் திருமணமும் நடந்தது. தற்போது இவர் தன் கணவனுடன் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் இவரிடம் பிரபல சேனல் பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சின்ன வயதிலே டான்ஸ் கற்றுக் கொண்டு இருந்தேன், துருதுருவென்று இருப்பேன். ஆதி படத்துக்கு ஆடிஷன் நடக்கிறது என்று தெரிந்தவுடன் என் அப்பா என்னை அங்கே கூட்டிட்டு போனார். ஆனால், நாங்க போகுறதுக்கு முன்னாடி அங்க திரிஷா உடைய சின்ன வயது நபரை செலக்ட் பண்ணி வைத்திருந்தார்கள். பின் அங்க நான் டான்ஸ் ஆடிட்டு, சேட்டை பண்ணிட்டு இருப்பதை பார்த்த அசிஸ்டன்ட் டைரக்டர் எங்களை எஸ்.ஏ சந்திரசேகர் சாரை போய் மீட் பண்ண சொன்னார்.
சுசித்ரா அளித்த பேட்டி:
நான் அவரிடம் டான்ஸ் ஆடிக் காட்டினேன், கலகலன்னு பேச ஆரம்பித்தேன். அவர் என்னையே சின்ன வயது திரிஷாவாக நடிக்க சொல்லிவிட்டார். அப்படித்தான் எனக்கு அந்த பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் முடிந்ததும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு மைடியர் பூதம் என்ற தொடரில் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதனை தொடர்ந்து கனா காணும் காலங்கள், மகான், அத்திப்பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்தேன். பிறகு கேஎஸ் ரவிக்குமார் சாருடைய ஆதவன் படத்துக்கான ஆடிஷன் நடந்தது.
கே.எஸ்.ரவிக்குமார்- சுசித்ரா இடையே உள்ள நட்பு:
அதில் நான் அவரிடம் பரத நாட்டியம் ஆடிக் காட்டினேன். உடனே எனக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தந்து இருந்தார். அந்த படத்தின் மூலம் அவர் எங்க ஃபேமிலி பிரண்ட் ஆக மாறிவிட்டார். மேலும், ஆதவன் படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் அத்தனை பெரிய பெரிய ஆட்களுடன் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அந்த சமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் நான் படிப்பில் கவனம் செலுத்தனும் என்று பிரேக் எடுத்துக்கொண்டேன். பத்தாம் வகுப்பில் 87% ஸ்கோர் பண்ணினேன். அதோடு மீடியா தான் என்னுடைய கேரியர் என்கிற முடிவை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு பிளஸ் 1 படிக்கும் போது சரவணன் மீனாட்சி முதல் சீசன் வாய்ப்பு கிடைத்தது.
லிங்கா பட வாய்ப்பு:
அந்த சீரியல் எனக்கு என்ற ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. பிளஸ் டூ எக்ஸாம் வந்ததால மறுபடியும் பிரேக் தேவைப்பட்டது. அதனால் வேறு வழியில்லாமல் சீரியல் இருந்து விலகி விட்டேன். பிறகு தாயுமானவர் என்ற தொடரின் மூலம் மறுபடியும் நடிக்க வந்தேன். ஆனால், நான் படித்த கல்லூரியில் லீவு எடுப்பது பிரச்சினையாக இருந்தது. அதனால் அந்த சீரியலின் என்னால் தொடர்ந்து பண்ண முடியவில்லை. பின் லிங்கா படம் ரவிக்குமார் சார் ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி பேப்பரில் பார்த்தவுடன் அவருக்கு விஷ் பண்ணிட்டு எனக்கு ரஜினி சாரை மீட் பண்ணனும் என்ற ஆசையாக இருக்கு என்று மெசேஜ் அனுப்பினேன்.
சுசித்ரா திருமணம்:
பின் அவர் என்னை அழைத்து சோனாக்ஷி தோழியாக நடிக்கிறாயா? என்று கேட்டார். எனக்கு பயங்கர ஹாப்பி ஆகிவிட்டது. அப்படியே பல படங்களில் நடித்து இருந்தேன். பின் சைகொலஜி படித்துவிட்டு எனக்கு ஸ்கூல் பசங்களுக்கு கவுன்சிலிங் பண்ணுவதற்கான வேலை கிடைத்தது. மீடியாவை என்னால் முழுதாக நம்ப முடியவில்லை. அது தான் கேரியர் என்கிற முடிவையும் எடுக்க முடியவில்லை. அது தவிர கவுன்சிலிங் கொடுக்க எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின் வேலையில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி எட்டு மாதம் ஆகிவிட்டது.
சுசித்ரா உடைய கனவு:
அரேஞ்ச் மேரேஜ் என்பதால் ஒருத்தரை புரிந்து கொண்டு வருகிறோம். நல்ல கதைக்களம் அதற்கேற்ற சூழல் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு நடிக்க முடியவில்லை என்றாலும் மீடியாவில் பாடகராக பயணிக்க வேண்டும் என்ற ஆசை. கர்நாடக சங்கீதம் கற்றிருக்கிறேன். ரகுமான் சார் இடம் ஒரே ஒரு பாடல் பாடனும். அதுதான் என்னுடைய கனவு. இப்போ அதை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கும். அவருடைய இசையில் ஒரு படத்தில் இல்லை என்றாலும் ஆல்பம் சாங்கில் பாடனும் ஏதாவது சாதிக்கணும் என்று புன்னகையுடன் சுசித்ரா கூறியிருக்கிறார்.