படு கோலாகலமாக நடைபெற்ற திருமணம் – ஆலுமா டோலுமாவுக்கு ஆட்டம் போட்ட நிக்கி – ஆதி. வைரலாகும் வீடியோ.

0
559
aadhi
- Advertisement -

கடந்த சில வாரங்களாகே டார்லிங் பட நடிகை நிக்கி கல்ராணி கூடிய விரைவில் ஆதியுடன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிக்கி கல்ராணி. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு மாடலும் ஆவார். பின் இவர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டார்லிங் என்ற படத்தின் மூலம் தான் நிக்கி கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-166.jpg

ஆனால், டார்லிங் படத்திற்கு முன்பாகவே நிக்கி அவர்கள் கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழியில் சில படங்களில் நடித்து உள்ளார். இப்படி இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜவம்சம். இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : ரஜினிக்கு முன்பே இந்தியன் படத்தில் கமலுக்கு வெள்ளை மேக்கப் போட்டுள்ள ஷங்கர் – நல்ல வேல இந்த கெட்டப் படத்துல வரல.

- Advertisement -

இறுதியாக நிக்கி நடித்த படம் :

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது. மேலும், நடிகர் சசிகுமார் உடைய ராஜவம்சம் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாக ராஜவம்சம் இருக்கிறது. இதனை தொடர்ந்து இறுதியாக நிக்கி கல்ராணி அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இடியட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆதி – நிக்கி கல்ராணி காதல் :

இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் ஆதியை தான் நிக்கி கல்ராணி திருமணம் செய்ய போகிறாராம். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி.இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்தம் :

மேலும், மரகதநாணயம் யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களில் ஆதி உடன் நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால், அதை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி சென்னையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது.

அதி – நிக்கி திருமண :

இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஹல்தி மற்றும் மெஹந்தி போடும் விழாவில் நானி, ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இருவருக்கும் நலங்கு வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆதியும், நிக்கியும் மஞ்சளில் குளித்தே விட்டனர். மேலும் இருவரும் இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர்.

Advertisement