ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு “Hero” வாழ்க்கையை நாசம் பண்ணிட்டிங்களே .! யாஷிகா, ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்த நடிகை

0
775
Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மஹத் வெளியேற்றபட்டார். பிக் பாஸ் வரலாற்றின் முதன் முறையாக ரெட் கார்டு மூலம் எலிமினேட் செய்யப்பட்டார் மஹத். மஹத்தின் எலிமினேஷனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மிகவும் கண் கலங்கி அழுது கொண்டிருந்தனர்.

- Advertisement -

மஹத்தின் எலிமினேஷனை விட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா வடித்த கண்ணீர் தான் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இருந்தது. இந்நிலையில் காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இருவரும் சேர்ந்து தான் மஹத்தின் வாழ்க்கையை பாழாக்கி விட்டனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை ஆர்த்தி ”இரண்டு பெண்களும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை பாழாக்கி விட்டனர்.ஆனால் எல்லாம் நன்மைக்கு தான்.மஹத் இனிமேல் பெண்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்.பிராச்சி, மஹத்தை புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்வர் என்று நம்புகிறேன். இதிலிருந்து மஹத் நல்ல பாடம் கற்றிருபார் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் பிரச்சனைகளை தன்னுடைய பிரச்சனையாக எண்ணி மும்தாஜிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். மஹத் அப்படி நடந்து கொண்டதற்கு யாஷிகா மீது வைத்துள்ள காதல் அவருடைய கண்ணை மறைத்து விட்டது என்று ரிதிவிக்கா கூட தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement