ஆர்த்தி ரவி எமோஷனலாக போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இது தொடர்பாக ஆர்த்தி, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவருமே மேட்சிங் உடை அணிந்திருந்தார்கள். இது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,
என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக, கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன்.
ரவி-ஆர்த்தி விவகாரம்:
இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக்கருதியதால் தான் அந்த விரதம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும்இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான். இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு.

கேனிஷா பதிவு:
எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார் என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா, வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கிறது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

ஆர்த்தி பதிவு:
இப்படி சர்ச்சைகள் வந்து இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் ரவி-கெனிஷா இருவருமே ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நீ(மகன்) என்னை பார்க்கும் பார்வை எனக்கு நன்றாகவே புரிகிறது. நான் நலமாக இருக்கிறேனா,கவலைப்படுகிறேனா என்பது போல தான் உன்னுடைய எண்ணம் இருக்கிறது. நீ வளர்ந்து கொண்டு இருக்கிறாய். அதனை என்னால் மாற்ற முடியாது.
View this post on Instagram
மகன்கள் பற்றி சொன்னது:
நீ இந்த வழியில் வளர்ந்திட கூடாது. ஆனால், நீ மற்ற எல்லோரையும் விட துணிச்சலானவன், அன்பானவன். நான் நேரான முதுகெலும்புவுடன் சண்டை போடுகிறேன். நான் பிரச்சினையை சுலபமாக அணுவதற்கு காரணம் இதுதான். என்னுடன் நடந்து செல்லும் இரண்டு ஆன்மாக்களை நான் மதிக்கிறேன். நான் ஒருபோதும் கற்பிக்க முடியாத வலிமையுடன் சாட்சியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஆரவ், அயன் நாம் நெருப்பின் வழியாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று ரொம்ப எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார்.






