நடிகர் ரவி மோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி மோகன் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து நடிகர் ரவி மோகன், ஆர்த்தி எப்போதும் எனக்கு முன்னாள் மனைவி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. என் குழந்தைகளை நான் கவனிக்கவில்லை என்று சொல்வது முற்றிலுமே தவறு. என் குழந்தைகளை நெருங்க கூட விடுவதில்லை. என் பொறுமைக்கும் எல்லை உண்டு. கெனிஷாவை பற்றி தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் என் உயிரை காக்க வந்த தோழி என்றெல்லாம் கூறியிருந்தார்.
ரவிமோகன்-ஆர்த்தி சர்ச்சை:
இப்படி இவர் பேசியதை அடுத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இப்படி மாற்றி மாற்றி இருவர் தரப்பிலும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ரவி மோகனின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை மட்டும்தான் ரவி தன்னுடைய பிள்ளைகளை சந்தித்து இருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில்தான் நடந்தது.
எங்களுடைய பிள்ளைகள் படும் மனவேதனையை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
அவர்களிடம் போன் இருக்கிறது. அந்த போனும் உபயோகத்தில் தான் இருக்கிறது. அதில் கூட ரவி,அழைத்து அவர்களுடன் பேசவில்லை. இதனால் தான் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஆர்த்தி அறிக்கை:
உண்மையிலேயே அவருக்கு பிள்ளைகளின் மீது பாசம் இருந்திருந்தால் எந்த சக்தியும் அவரை தடுத்து இருக்க முடியாது. நிச்சயம் அவர் சந்தித்து இருப்பார். பிள்ளைகள் தன்னுடைய தந்தையின் மீது ரொம்ப பாசத்தில் இருக்கிறார்கள். குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தி உள்ளேன் என்று அவர் கூறியிருக்கிறார். அவர்களை சந்திக்கவோ, அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படி சட்டபூர்வமாக எந்த ஒரு முயற்சியுமே அவர் எடுக்கவில்லை. இதுதான் உண்மை. என்னுடைய கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்த போது தான் இங்கு ஒரு சின்ன கார் விபத்து நடந்தது. ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. அந்த விபத்தில் சேதம் அடைந்த காரை சரிசெய் இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டது. அதை எடுத்துக் கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்துக்கு போனோம். ஆனால், என்னை உள்ளே கூட விடாமல் காவலர்கள் வெளியேற்றி விட்டார்கள்.
சட்டப்படி எனக்கும் உரிமை உள்ள இடத்திலிருந்து அவமானப்படுத்தி அனுப்பப்பட்டேன். அனைத்து வடிவத்திலும் ரவி என்னால் துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார். இதை கேட்கும் போது ரொம்ப மனசு வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக சொல்வதை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் அது அவருடைய விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர கட்டாயத்தினால் கிடையாது. தன்னுடைய சொத்துக்களை, கவுரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறி போகவில்லை. நன்றாக முன்கூட்டியே தெளிவாக திட்டம் போட்டு விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு தான் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ஓவர் காரில் தான் வீட்டை விட்டு சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும் மிகுந்த நிதானத்துடன் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
View this post on Instagram
உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பி செல்ல நினைத்திருந்தால் நேராக அவர் அடிக்கடி
தொலைத்த பெற்றோர்கள் என்று குறிப்பிடும் அவர் பெற்றோர் வீட்டிற்கு தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அதை விட்டு எங்கள் வாழ்க்கையில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்பட்டதாக புகார் கூறுகிறார். அப்படியானால் ஏன் இத்தனை ஆண்டுகள் வரை அவர் காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் என்னுடன் வாழ்ந்தார்? அவருக்கு உரிமை உள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தன்னுடைய குட்டு வெளிப்பட்டவுடன் தன் மீது குற்றம் சுமத்தி விடுவார்களோ என்ற நிலையில்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல. அவருடைய ரகசிய வாழ்க்கை காப்பாற்றப்பட முடியாமல் போனதுதான். வீட்டோட மாப்பிள்ளை ஆக இருந்தேன் என்று அவர் குற்றம் வைத்திருக்கிறார். அது முழுக்க முழுக்க பொய். எங்களுக்கு திருமணமான முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இரண்டு வீடுகளில் மட்டும் தான் வசித்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதுமே என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியது கிடையாது. எங்கள் பிள்ளைகளை கருவிகளாக பயன்படுத்தி ஆதாயம் தேட நினைப்பவள் நான் இல்லை. நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒருபோதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. இன்னும் நான் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






