விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் “ஆயுத எழுத்து”. இந்த சீரியல் வந்த கொஞ்ச நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,இந்த சீரியலில் நடிக்கும் ஹீரோ,ஹீரோயின் இருவருமே சீரியலை விட்டு விலகி இருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் அம்ஜித்,ஸ்ரீத்து ஜோடி இருவருமே திடீரென விலகி விட்டார்கள். அதனால்,அவர்களுக்கு பதிலாக தற்போது சக்திவேல்,இந்திரா கதாபாத்திரங்களில் ஆனந்த் மற்றும் சரண்யா சுந்தராஜ் தற்போது நடிக்கிறார்கள். மேலும், சமூக வலைத்தளங்களில் ஸ்ரீத்து சம்பந்தமாக பல மீம்ஸ்கள் வந்ததனால் தான் நடிகை ஸ்ரீத்து அவர்கள் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து காளி அம்மா மகன் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அம்ஜத் கான் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்றும் தெரிந்தது.
மேலும்,நடிகர் அம்ஜத்துக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து உள்ளதால் தான் ஆயுத எழுத்து சீரியலில் விலகி உள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். மேலும், அவர் நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது தெரிய வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தற்போது சினிமா படங்களில் நடிகர் அம்ஜத் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீண்டும் நீங்களே வந்து நடியுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் அளவிற்கு அவருடைய நடிப்பு சீரியலில் இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அம்ஜத் இடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், அதில் அவர் கூறியது, ஆயுத எழுத்து சீரியல் இருந்து திடீரென்று விலகவில்லை.
இதையும் பாருங்க : விஜய் வீட்டின் மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி. அதுவும் காதல் திருமணமாம்.
இது இரண்டு மாதத்திற்கு முன்பாகவே எனக்கு தனிப்பட்ட விஷயங்கள் இருக்கு என்று சீரியல் இயக்குனரிடம் கூறி இருந்தேன். அதனால் என்னை எப்படியாவது ரிலீவ் பண்ணி விடுங்கள் என ரெகுஸ்ட் ஆக கேட்டிருந்தேன். மேலும், அவர்களும் சக்திவேல் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒருவரை தேர்வு செய்த உடன் நீங்கள் விலகிக்கலாம் என்றும் கூறி இருந்தார்கள். அதோடு ஸ்ரீத்து வெளியேறியது எனக்கு தெரியாது. அவர் வெளியேறி சில நாட்களுக்குப் பிறகு தான் எனக்கு சொன்னார்கள். மேலும், நான் தற்போது டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘இக்லூ’ என்ற படத்தில் நடித்துள்ளேன்.
அது மட்டும் இல்லாமல் ஒரு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறேன். அஞ்சு சூரியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் பரத் மோகன். இந்த படம் ஒரு நேர்மையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை தான். இதற்கு முன்னாடியே நட்பதிகாரம், வலியவன்,மாயா, தற்போது கார்த்தியின் நடிப்பில் வந்த கைதி என பல படங்களில் நடித்து உள்ளேன். இதனை தொடர்ந்து இரவாகளம் என்ற படத்தில் நடித்து உள்ளேன். மேலும், இந்த படம் அடுத்த வருடம் திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.