தன்னை அம்பானி குடும்பம் என்று நினைத்து ட்விட்டரில் Tag செய்து புகார் அளித்த வட இளைஞர் – வடக்கன் என குறிப்பிட்டு அம்பானி ஷங்கர் போட்ட பதிவு.

0
250
ambani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் அம்பானி சங்கர். தற்போது நடிகர் அம்பானி சங்கர் என்ன செய்கிறார்? அவர் மனைவி யார் ? என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்… “கடுகு சிறித்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் அம்பானி சங்கர் தன் வாழ்க்கையில் முன்னேறியவர். நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் சினிமா உலகில் உயரம் ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளவர். தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் ,விடாமுயற்சியாலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

-விளம்பரம்-
ambani

மேலும், அம்பானி சங்கர் தன்னுடைய தனித் துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். நடிகர் அஜித்தின் ‘ஜீ’ படத்தின் மூலம் தான் அம்பானி சங்கர் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். நடிகர் கருணாஸ் மற்றும் அம்பானி சங்கர் இணைந்து நடித்த படம் “அம்பாசமுத்திரம் அம்பானி”. மேலும், இவர் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கினார்.

- Advertisement -

மேலும், அம்பானி சங்கர் தன்னுடைய தனித் துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். நடிகர் அஜித்தின் ‘ஜீ’ படத்தின் மூலம் தான் அம்பானி சங்கர் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். நடிகர் கருணாஸ் மற்றும் அம்பானி சங்கர் இணைந்து நடித்த படம் “அம்பாசமுத்திரம் அம்பானி”. மேலும், இவர் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கினார்.

அந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் அம்பானி சங்கர் என்று அழைத்தார்கள்.இவர் இதுவரை 35 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, பெரிய கருப்பு தேவர், சிங்கமுத்து, போண்டாமணி உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் வந்து வாழ்த்தினார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அம்பானி குடும்பத்திடம் புகார் அளிப்பதாக நினைத்து ட்விட்டரில் வட மாநில நபர் ஒருவர் இவரையும் டேக் செய்து இருக்கிறார். தீப் சந்திரா என்பவர் ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார், அதில் தனது கடந்த 6 மாத வங்கி கணக்கின் விவரங்கள் குறித்து ஜியோ நிறுவனத்திடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரை ஏற்கவில்லை என்றால் புகார் தொடர்பான புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.

மேலும், அந்த ட்விட்டர் பதிவில் அம்பானி என்று பெயர் வைத்துள்ள நபர்களை எல்லாம் டேக் செய்துள்ளார். அந்த வகையில் தமிழ் நடிகரான ‘அம்பானி சங்கரையும்’ டேக் செய்துள்ளார். இதையடுத்து அவரின் அந்த பதிவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அம்பானி ஷங்கர் ‘Twitter- ல வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தை சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய tag பண்றாங்க’ என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.

Advertisement