கலாஷேத்ராவில் பயின்ற போது ஆசிரியர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அபிராமி போட்ட பதிவு.

0
708
Abhirami
- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் அபிராமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது. இந்த நிலையில் இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்திருக்கின்றது.

-விளம்பரம்-

இதனால் கலாஷேத்ரா அறக்கட்டையின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர்.பின் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் அபிராமி. இதுகுறித்து பேசிய அவர் “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன்.

-விளம்பரம்-

கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.கலாஷேத்ரா ஆசிரியர் நிர்மலா என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறியுள்ளார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் மாணவிகள் சிலர் கலாஷேத்ரா கல்லூரியில் தங்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் போது தங்களுடைய ஜாதி குறித்து கேட்கப்படுவதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. இதுகுறித்து பேசிய மாணவி ஒருவர் ‘பயிற்சிக்கு செல்லும் போது நீங்கள் எந்த ஜாதி பிராமினா மலையாள பயங்கர என்றெல்லாம் கேட்டுவிட்டேன் அதற்கு ஏற்றார் போல தான் மதிப்பெண்கள் போடுவார்கள்’ என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கலாஷேத்ரா கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய மின்சாரம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அபிராமி.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ”நான் ஜாதி குறித்து ஒருபோதும் பேசியது கிடையாது ஒருபோதும் அதை நம்பியதும் கிடையாது அதிலிருந்து நான் எப்போதும் தள்ளி தான் இருக்க விரும்புகிறேன். நான் பேசுவதை திரித்து கூற வேண்டாம் தயவு செய்து ஒழுங்காக படியுங்கள். இந்த புகைப்படம் என்னுடைய இரண்டாம் ஆண்டு தேர்வுக்கு பின் எடுக்கப்பட்ட நினைவுகள். நீங்கள் இதில் அனைத்து வகையான மக்களையும் பார்க்கலாம். நாங்கள் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். ஒருவேளை நாங்கள் ஜாதி அடிப்படையில் நடத்தப்பட்டிருந்தால் எங்கள் யாருடைய முகத்திலும் இப்படி நீங்கள் புன்னகையை கண்டிருக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

Advertisement