30 நிமிடம் நிற்கும் ரயில். 1600 பயணிகளுக்கு அம்மாமுவுடன் சேர்ந்து ஓடி ஓடி உதவும் பச்சத் தமிழ் நடிகை.

0
2650
varalakshmi
- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் கவலையிலும், பயத்திலும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது மத்திய அரசாங்கம். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சோசியல் மீடியவைல் வெளியிட்டு வருகின்றன.

-விளம்பரம்-

இதிலிருந்து தப்பிக்க அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டும், கைகளை சுத்தமாக கழுவி இருப்பதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் தான். இந்த இக்கட்டான சூழலில் மக்கள் அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அன்றாட உணவிற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் அனைவரும் ஒருவேளை சோற்றுக்கே தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வேலைக்காக வெளியூர் சென்ற மக்கள் எல்லாம் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

- Advertisement -

இதற்கு அரசாங்கம் சிறப்பு ரயில்களை அமைத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறது. இந்நிலையில் அப்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரபல நடிகை வரலட்சுமி அவர்கள் தனது தாயுடன் இணைந்து சமூக சேவை செய்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே நடிகை வரலட்சுமி அவர்கள் பல உதவிகளை செய்துள்ளார். தற்போது ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உண்ண ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார். அவர் ரொட்டி வழங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பிற ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள் சென்னையில் 30 நிமிடம் நிறுத்தப்படுகிறது. 20 பெட்டிகளில் தலா ஒரு பெட்டிக்கு 80 பேர் என இருப்பார்கள்.

Varalakshmi Sarathkumar: Unnai Arindhal host Varalakshmi ...

அவர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை தனது தாயுடன் சேர்ந்து அளித்து உள்ளார் வரலக்ஷ்மி. இவர் முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக சேவையில் இறங்கியுள்ளார். இவரின் நல்ல உள்ளத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement