-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

வேறு சமூகம், இத்தனை வயது வித்யாசம், இருந்தும் விட்டுக்கொடுக்காமல் இருந்த காரணம் – தனது இரண்டாம் திருமணம் குறித்து அபிஷேக் ராஜா

0
129

பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்த நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் அவர்கள் அளித்த பேட்டி தான் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும், யூட்யூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.

-விளம்பரம்-

யூடுயூப் விமர்சனங்கள் மூலம் பிரபலமான இவர் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’படத்தில் கூட நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் 5வில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பொதுவாக பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்துதான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டுதான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருந்தார்.

அபிஷேக் திருமணம்:

மேலும், அபிஷேக் திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்நிலையில்தான், இவர் ஸ்வாதி என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பே சோசியல் மீடியாவில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா- ஸ்வாதி இருவருக்குமே சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது இரண்டாவது திருமணம் என்பதால் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றார்கள்.

அபிஷேக் கூறியது:

-விளம்பரம்-

சமீபத்தில் அளித்த பேட்டியில் அபிஷேக், சுவாதி பொருத்தவரையில், அவர் என் நண்பராக இருந்து, கேர்ள் ஃப்ரண்டாக மாறி, மனைவியாக மாறியவர். அதனால் அவளுக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும். என்னை அடைய வேண்டும் என்று அவள் எடுத்த முயற்சி தான் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. சுவாதிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

-விளம்பரம்-

இன்னொரு தாய்:

இப்போது எல்லாரும் ஸ்வாதியும் கலரை பற்றி தான் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்திலேயே அதிக கவர்ச்சியான பெண் அவள்தான். ஒரு தாய் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல, சுவாதி என்னை பார்த்துக் கொள்வாள். கல்யாணத்தில் தாலிக்கட்ட பத்து நிமிஷம் இருக்கும்போது, அவள் உண்மையாகவே காதலிக்கிறாய் போலிருக்கிறது, கல்யாணம் எல்லாம் செய்து கொள்கிறாய் என்றாள். அதற்கு நான், ‘அடிப்பாவி உனக்கு இன்னும் எப்படி தான் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டேன்’ என்று புன்னகையோடு கூறினார் அபிஷேக்.

சுவாதி கூறுகையில்:

பின்பு சுவாதி கூறுகையில், என்னுடைய அப்பா அம்மாவிற்கு மகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அவருக்கும் எனக்கும் 8 வயசு வித்தியாசம், வேறு வேறு ஜாதி, இருப்பினும் இதுவரை கடைசிவரை விட்டுக் கொடுக்காமல் இருந்தது காரணம் என்னுடைய பெற்றோர்கள் தான். எனது பெற்றோர்கள் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது” என்றார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்களும், பேட்டிகளும் வெளியான நிலையில், அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news