திரைக்கு வருவதற்கு முன்பு சாண்டி என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா ?

0
4016
dancer sandy

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நெகிழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் டான்சர் சாண்டி. தற்போது இவர் ரஜினியின் கால படத்திற்கு கோரியோகிராப் செய்துகொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய உச்சம் தொட்ட சாண்டி, ஆரம்ப காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தார் என்று பார்ப்போம் வாருங்கள்.

dancer sandyஆரம்பத்தில் இவர் திருவிழாக்களில் நடனமாடும் ஒரு மேடை கலைஞனாகவே இருந்த்துள்ளார். அந்த சமயங்களில் ஒரு நாளைக்கு 30, 40 பாடல்களுக்கு இவர் டான்ஸ் ஆடுவாராம் ஆனால் இவருக்கு சம்பளம் அப்போது வெறும் 250 ரூபாய் தானாம். ஒரு கட்டத்தில் ஜெயந்தி மாஸ்டரின் குரூப்பில் சேர்ந்து திரைப்படங்களில் வரும் குரூப் டான்ஸ் பாடல்களுக்கு கடைசி வரிசையில் ஆடி வந்துள்ளார்.

பிறகு இவருடைய தனித்துவமான திறமையை கண்ட கலா மாஸ்டர் இவரை முன் வரிசையில் ஆடவைத்துள்ளார். அதன் பிறகு மானாட மயிலாட நெகிழ்ச்சியில் கோரியோகிராப் செய்யும் வாய்ப்பையும் கலா மாஸ்டர் இவருக்கு தந்துள்ளார்.

dancer sandyஒரு கட்டத்தில் ரோபோ ஷங்கர் மூலமாக விஜய் டிவியில் இவர் அறிமுகமாக, அதன் பிறகு விஜய் டிவியில் பல சிறப்பு பெர்பார்மென்ஸ்களை இவர் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிறைவு விழாவிலும் இவரின்சிறப்பு நடனம் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

dancer sandyஇப்படி ஒரு சாதாரண மேடை நடன கலைஞனாய் இருந்து இப்போது இவர் சூப்பர் ஸ்டாருக்கே கோரியோகிராப் செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் இவருடைய கடின உழைப்பே. இவரின் வளர்ச்சிக்கு நமது பாராட்டுக்கள்.