மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அன்றே நடிகர் அர்ஜுன் மரியாதை செய்திருக்கும் செய்திகள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் தான் 'அமரன்'. இத்திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு ஆகும்.

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படத்தை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது.
கௌரவித்த ஆக்சன் கிங் அர்ஜுன்:
தற்போது மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டும் பேசட்டும் வருகிறது. ஆனால், ஆக்சன் கிங் அர்ஜுன் 10 ஆண்டுகளுக்கு முன்பே முகுந்தின் குடும்பத்தை கௌரவித்து இருக்கிறார். மேஜர் முகுந்த் அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நம் நாட்டிற்காக போரில் உயிர் தியாகம் செய்தார். அதே ஆண்டு, நவம்பர் மாதம் ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கி, நடித்த 'ஜெய்ஹிந்த் 2' திரைப்படம் வெளியானது.
https://www.youtube.com/watch?v=P1S0GWzDe-w
'ஜெய்ஹிந்த் 2' இசை வெளியீட்டு விழா:
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, அதே 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஜெய்ஹிந்த் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, காஷ்மீர் போர்க்களத்தில் போராளிகளுடன் போராடி உயிர் நீத்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரை அர்ஜுன் அழைத்திருந்தார். அப்போது மூன்று வயதாக இருந்த முகுந்தின் மகள் அர்ஷியா தான் 'ஜெய்ஹிந்த் 2' படத்தின் ஆடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் அர்ஜுன் பேசியது:
அப்போது பேசிய அர்ஜுன், நானும் ஒரு மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஒருநாள், அதற்கான விண்ணப்பத்தை கொண்டு போய் என்னுடைய அப்பா அம்மா கிட்ட கொடுத்தேன். அதுல, உயிருக்கு என்ன ஆனாலும் நாங்க தான் பொறுப்பு என்று பெற்றோர்கள் கையெழுத்துபோடும் இடத்தில் எனது அம்மா கையெழுத்து இடவில்லை. இல்லையென்றால் நானும் மிலிட்டரிக்கு போய் இருப்பேன் என்று பேசியிருந்தார். அதை தொடர்ந்து பேசிய முகுந்தின் தந்தை, இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் நான் இருக்கேன் என்றால், அந்த மரியாதை எனது மகன் முகுந்தை சேரும்.

முகுந்தின் தந்தை பேசியது:
அவன் மூணாவது படிக்கும் போது இருந்தே, நான் பார்டர்ல போயிட்டு ஃபைட் பண்ணனும் என்று சொல்வான். அந்த எண்ணம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது. நாங்க ஆலப்புழா இருக்கும்போது, 'ஜென்டில்மேன்' படம் வந்தது. எங்க கிட்ட சொல்லாமலே முகுந்த் பசங்களோட போயிட்டு படத்தை பார்த்துட்டு வந்துட்டான். அதுல இருந்து, அவனுக்கு போலீஸ், ஃபைட்டிங் என்றால் ரொம்ப ஆசை. அதை நிறைவேற்ற வேண்டும் என்று சின்ன வயதில் இருந்து மனதில் வைத்திருந்தான் போலிருக்கிறது. எங்களுக்கு அது தெரியாது. அப்போதான், எனக்கு ஒரு 4,000 ரூபாய் கொடுங்க, நான் SSP ட்ரைனிங் போக வேண்டும், எனக்கு ஆர்மில ஜாயின் பண்ண வேண்டும் என்று சொன்னான். அதேபோல் எனக்கு, 'Rajput Regiment ' தான் வேண்டும் என்று சொன்னான். அவன் நினைச்சதை சாதிச்சிட்டான் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.






