பீஸ்ட் படத்தை விமர்சித்து பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கும் நடிகர் ஆரியின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் என்று பலர் கூறி வருகின்றனர்.
எதிர்பாராத விதமாக இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றுவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான படம் தான் கேஜிஎப் 2. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக இருக்கிறது. கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
பீஸ்ட் vs கேஜிஎப் 2 விமர்சனம்:
அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இதனால் பீஸ்ட் படத்தை கேஜிஎப் 2 உடன் ஒப்பிட்டு தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பீஸ்ட் படம் ஒண்ணுமே இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்து இருந்தாலும் வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரி அளித்த பேட்டி:
மேலும், பீஸ்ட் படத்துக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்கில் எல்லாம் கேஜிஎப் 2 படம் மாறி உள்ளன என்று கூறப்படுகிறது. ஆகவே பீஸ்ட் படத்தை தூக்கி கேஜிஎப் 2 வெளியிட நிறைய தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இப்படி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பீஸ்ட் படத்தைப் பற்றிப் விமர்சித்து பேசுகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும், பிக்பாஸ் பிரபலமான ஆரி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பீஸ்ட் படம் வெளிவருவதற்கு முன்பே யாஷ், பீஸ்ட் vs கேஜிஎப் 2 கிடையாது. பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 என்று கூறியிருந்தார். இரண்டு படங்களும் வெளிவந்த பிறகு பீஸ்ட் vs கேஜிஎப் 2 என்று பெரிய விமர்சனங்கள் ஆகவே மாறிவிட்டது.
சினிமா பற்றி ஆரி கூறியது:
சினிமா என்பது திட்டுபவர்களையும் வாழ வைக்கும், பாராட்டுபவர்களையும் வாழவைக்கும். இப்போது திட்டி சம்பாதிக்கிற ஒவ்வொரு பேரும் இந்த சினிமாவை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் ஒத்த செருப்பு என்ற படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த காலத்திலேயே கமலஹாசன் நாயகன் படம் இன்றும் பேசப்படுகிறது. இப்படி இருக்கும் போது தமிழ் சினிமாவின் தரம் குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் சொல்லலாமே தவிர தமிழ் சினிமாவையே மட்டமான படங்கள் தருகிறது என்று குறை சொல்லக் கூடாது.
திரை அரங்கு ஊழியர்கள் குறித்து கூறியது:
தமிழ் சினிமாவை விமர்சனம் செய்பவர்கள் கூட அதன் மூலம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக திரையரங்கள் ஓடாமல் அவ்வளவு திரை அரங்கு ஊழியர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். ஆனால், தற்போது வெளியாகியுள்ள இரண்டு படங்களும் நன்றாக ஓடி வருகிறது. அந்த இரண்டு படங்களுக்கு வருபவர்களும் காசு கொடுத்துதான் படம் பார்க்கிறார்கள். அதனால் ஒரு படத்தை தாழ்த்திப் பேசுவது இன்னொரு படத்தை புகழ்ந்து பேசுவதும் சரியல்ல. உங்களுக்கு இரண்டு படங்களுமே குழந்தை மாதிரி தான். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு தடவுவது சரியல்ல.
படம் விமர்சனம் குறித்து ஆரி கூறியது:
ஒரு படத்தை விமர்சனம் சொல்லாதீர்கள். படம் சரியில்லை என்றால் இயக்குனர்களும் படக்குழுவும் சேர்ந்த அதை திருத்தி கொள்வார்கள். இப்படி விமர்சிப்பதன் மூலம் படத்திற்கு உழைத்த அத்தனை நபர்களின் உழைப்பும் வீணாகும். கேஜிஎஃப் போன்ற படங்கள் வெற்றி அடைவது ரொம்ப சந்தோசம் தான். ஆனால், இதற்கு முன்பே நம்முடைய தமிழ் படங்கள் பல சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் படங்களை விமர்சனம் செய்து பல பேரின் உழைப்பையும் வாழ்க்கையையும் வீணடிக்காதீர்கள் என்று கூறி இருக்கிறார்.
பாக்கியராஜ் பதிலடி :
ஆரி இப்படி பேசிய பின்னர் அதே மேடையில் பாக்கியராஜ் பேசுகையில் ‘ஆரி பேசியது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் அடிக்கடி விமர்சனம், விமர்சனம் என்று தான் பேசி கொண்டு இருந்தார். விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் சொல்லும் குறைகளை மறுமுறை சரி செய்ய முயல வேண்டும். ஒவ்வொரு மேடையிலும் விமர்சகர்களை குறிவைத்து பேசக்கூடாது என்று பேசி இருக்கிறார்.