சகாயம் கலெக்டரிடம் பாராட்டை வாங்கிய பிரபல நடிகர் ! யார் , ஏன் தெரியுமா ?

0
1288
Actor aari

நடிகர் நடிகைகளில் சமூக அக்கறை கொண்ட நபர்கள் மிகவும் குறைவுதான்.அந்த வருவசையில் நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி. சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை,விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து விசயத்திற்கு முன்னின்று குரல் கொடுத்தவர்.

Aari

இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார் அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறார் ஆதி. இதற்க்காக அவர் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார்.
சமீபத்தில் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அந்த விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் அணைவரலாலும் விரும்பப்பட்டு அவர் அரசியலுக்கு வரமாட்டாரா என்று எதிர்பார்க்கப்படும் கறைபடியா கரம் கொண்ட கலெக்டர் சகாயம் அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய திரு சகாயம் அவர்கள் நடிகர் ஆரி சினிமா துறையில் இருந்தாலும் அவர் சமூக அக்கரையுடன் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என்றும்.ஆரியின் இந்த சமூக ஆர்வத்திற்கு விவசாயத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று அரியை அந்த மேடையில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.