மூக்கில் டுயூப், கையில் ட்ரிப்ஸ் – மருத்துவமனையில் அப்பாஸ். என்னப்பா ஆச்சி இவருக்கு பாவம்.

0
554
abbas
- Advertisement -

மருத்துவமனையில் அப்பாஸ் அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்துள்ளனர். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை என பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் இருந்தவர்கள் தான். அந்த வரிசையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.

-விளம்பரம்-

1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகம் ஆனார். இவரின் முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அப்பாஸ் திரைப்பயணம்:

இதனிடையே அப்பாஸ் அவர்கள் எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு பிழைகளை இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னரும் அப்பாஸ் அவர்கள் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார்.

அப்பாஸ் குறித்த தகவல்:

அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. பின் இவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் அவ்வபோது எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ஹாஸ்பிடலில் அப்பாஸ்:

அதில் அப்பாஸ் மகள் ஹீரோயினி போல் செம அழகாக இருந்தார். இதனால் இவர் சினிமாவிற்கு வருவாரா? என்று எல்லாம் ரசிகர்கள் கேட்டு இருந்தார்கள். இந்த நிலையில் மருத்துவமனையில் நடிகர் அப்பாஸ் இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அப்பாஸுக்கு கால் முட்டியில் ஒரு சிறு இஞ்சூரி ஏற்பட்டிருக்கிறது.

வைரலாகும் புகைப்படம்:

பின் அக்டோபர் மாதம் தன்னுடைய முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு இருந்ததாகவும், தன்னுடைய வலது காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது இவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படத்தை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நீங்கள் விரைவில் குணமடைய எங்களுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement