96 படம் குறித்து கமல் என்ன சொன்னார்…!கமலை நேரில் சந்தித்த ஆதித்யா பேட்டி…!

0
316

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .வசூல் ரீதியாக ஹிட் அடித்த இந்தப் படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Adithyakamal

நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடைகர் எம்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அவரின் மகன் ஆதித்யா இருவரும் நடிகர் கமலை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள ஆதித்யா,கமல் சாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொல்லத்தான் நானும், அப்பாவும் அவரைச் சந்திக்கப் போனோம்.

அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். நான் நடிகன் ஆனது கேள்விப்பட்டிருந்தார்.அதற்காக எனக்கு `ஆல் தி பெஸ்ட்’ சொன்னார். இன்னும் `96′ படத்தை அவர் பார்க்கவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே எங்களுடைய இந்த மீட்டிங் நடந்தது. மற்றபடி எதுவும் இல்லை. கமல் சாரை பார்த்ததே மகிழ்ச்சி என்றார்” ஆதித்யா பாஸ்கர்.