முகநூல் லைவ் சாட்டால் வந்த வினை. கைது செய்யப்பட்ட சூர்யா பட நடிகர்.

0
4483
ajazkhan
- Advertisement -

பாலிவுட்டில் பிரபலமான நடிகரும், சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய நாயகனாகவும் வலம் வருபவர் அஜாஸ்கான். இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். 2010 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியான ரத்தச் சரித்திரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜாஸ்கான் நடித்திருந்தார். இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கில் கூட வெளியாகி இருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி சர்ச்சைக்குரிய விதமாக பேசி இருப்பதால் தற்போது சூர்யா பட நடிகர் அஜாஸ்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

நாடு முழுவதும் கோரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் மே 3 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டித்து உள்ளார். இதனால் சினிமா முதல் சின்னத் திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

- Advertisement -

சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும், வீட்டு வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று பல வேலைகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர் அஜாஸ்கான் அவர்கள் பேஸ்புக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் பதில் அளித்து வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அஜாஸ்கான் பதில் கூறியுள்ளார். சோசியல் மீடியாவில் இவர் அளித்த பதில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது.

-விளம்பரம்-

இதனை அடுத்து மும்பை காவல்துறையினர் நடிகர் அஜாஸ்கான் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை செய்வதாக செய்திகள் வெளிவந்து உள்ளது. அதில் அஜாஸ்கான் அவர்கள் இரு சமூகங்களுக்கு இடையேயான பகைமை வளர்த்ததாக போலீசில் வழக்கு பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே போல் சமூக பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் அஜாஸ்கானை மும்பை போலீஸ் கைது செய்து இருந்தார்கள் என்பது குறித்து குறிப்பிடத்தக்கது. இதே போல் அஜாஸ்கான் பலமுறை போலீஸ் வழக்குகளில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்.

Advertisement