படப்பிடிப்பில் முதுகுவலியால் அஜித் சார் 5 மணி நேரம் நின்றுகொண்டே இருந்தார்..!பிரபல நடிகர் உருக்கம்..!

0
1403
Ajith
- Advertisement -

நடிகர் தம்பி ராமைய்யா, தமிழில் வெளியான “மைனா” படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர். மேலும் கும்கி, சாட்டை, தனி ஒருவன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறப்பான பெயரை பெற்றிருப்பவர்.

-விளம்பரம்-

Thambi Ramaiah

- Advertisement -

நடிகர் தம்பி ராமைய்யா அஜித் நடித்துள்ள பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதே போல தற்போது அஜித் நடிப்பில் வெளியாக உள்ள ‘விஸ்வாசம்’படத்திலும் நடித்து வருகிறார்.நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி கார், பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்று தெரியும் அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் கார் ரேஸ் விபத்தில் சிக்கி அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இருப்பினும் சில மாதம் ஓய்விற்கு பிறகு தனது ரசிகர்களுக்காக மீண்டும் நடிக்க துவங்கினார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித், கிரீடம் படத்தின் படப்பிடிப்பின் போது முதுகு வலியால் மிகவும் சிரமப்பட்டுள்ளார் என்ற ஒரு சோகமாக சம்பவத்தை நடிகர் தம்பி ராமைய்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Ajithtambiramiya

இதுகுறித்து பேசியுள்ள நடிகர் தம்பி ராமைய்யா, நான் அஜித் சாருடன் கிரீடம் படத்தில் நடித்துள்ளேன்.அந்த படத்தின் படப்பிடிப்பின் போது வேறொரு நடிகருக்கான காட்சி எடுக்கப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் அனைவரும் செட்டில் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது அஜித் சார் எங்களை எல்லாம் உட்கார வைத்துவிட்டு அவர் மட்டும் நின்றுகொண்டே இருந்தார், நான் அவரை உட்காருங்கள் என்றதுக்கு ‘இல்லை எனக்கு முதுகில் பிரச்னை இருக்கிறது அதானால் உட்கார்ந்தால் வலி ஏற்படும்’ என்று கூறி மதியம் 2 மணியில் இருந்து 7 மணி வரை கிட்டத்தட்ட 5 மணி நேரம் நின்றுகொண்டே எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பட்ட கஷ்டங்களை பார்த்து வலியின் இருந்து அவர் குணமாக வேண்டும் எல்லாம் வேண்டிருக்கிறேன்.அவர் மிகவும் அற்புதமான ஒரு மனிதர் என்று நடிகர் தம்பி ராமைய்யா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement