அஜித்திடம் கட்ட பஞ்சாயத்து செய்து ரூ 2 கோடி மோசடி ! அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்

0
1153
ajith

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக பணத்தின் மூலமும் அதிகாரத்தின் மூலமும் கட்டப்பஞ்சாயத்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை பல நடிகர்களும் அவ்வப்போது தெரிந்தும் தெரியாமலும் பேசி வந்தனர்.
ajith
மேலும் இதன் காரணமாக சமீபத்தில் சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் உள்ள கட்டப்பஞ்சாயத்து பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

அதேபோல் நேற்று மதுரையில் விநியோகஸ்தர் சங்க தேர்தலுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஞானவேலராஜா மதுரையில் விநியோகஸ்தர்கள் இல்லாமல் போனதற்கு அருள்நிதி மற்றும் அவரது க்ரூப் தான் காரணம் என மறைமுகமாக பேசினார். மேலும் மதுரையில் படங்களை வாங்க ஆம்பளைகளே இல்லையா? என ஆவேசமாக பேசினார்

இதே க்ரூப் தான் தல அஜீத் குமாரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து அவரிடம் ₹ 2 கோடி மிரட்டி பறித்தது எனவும் கூறினார். இதனால் தமிழ் சினிமா உலகம் சற்று அதிர்ச்சியில் உள்ளது.