குளம் வெட்ட 25 லட்சம் ! ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு குளம் வெட்டிய பிரபல நடிகர் !

0
1201
akshay-kumar Actor

இந்தியா ஒரு விவசாய நாடு விவசாயம் செழிக்க வேண்டும் என்றால் முதலில் விவசாயம் செய்யும் கிராமங்களை காப்பாற்ற வேண்டும்.மேலும் தற்போது இருந்து வரும் பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் குடி நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.அப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்கு தனது சொந்த பணத்தை போட்டு குடிநீர் பிரச்னையை தீர்த்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

akshay kumar

நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.மேலும் இவர் அடிக்கடி தம்மால் இயன்ற உத்தவியை அடிக்கடி மக்களுக்கு செய்து வருகிறார். சமீபத்தில் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள Pimpode Budruk என்ற கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அந்த கிராமத்தில் மழை நீரை சேகரிக்கும் குளம் ஒன்றை வெட்ட 25 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

மேலும் தற்போது படத்தில் நடித்து வந்தாலும் அந்த படங்களின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தாமே அந்த கிராமத்திற்கு நேற்று ஆவரே நேரில் சென்று களத்தில் விவசயிகளுடன் சேர்ந்து குளம் வெட்டியுள்ளார்.

Actor akshay kumar

அக்ஷய் குமார் செய்த இந்த உதவிக்கு கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், தங்களது கிராமத்தில் குளம் வெட்டியதால் விரைவில் தங்களது தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.