2010 ஆம் ஆண்டு பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் வெளிவந்த நகைச்சவை திரைப்படம் தான் அம்பாசமுத்திரம் அம்பானி. இந்த படத்தில் கருணாஸ் நவநீத்தி, அம்பானி சங்கர், லிவிங் ஸ்டண் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்கள். இந்த படத்தின் மூலமாக பிரபலமாக மாறிய நகைச்சுவை நடிகர் தான் அம்பானி சங்கர். இவர் சினிமா வாழ்க்கையைத் தவிர ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வைத்து சமூக வாழ்வில் ஈடுபடும் சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். சமீபத்தில் அம்பானி சங்கர் தனியார் யூடியூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையை குறித்து சந்தோசம், துக்க நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துள்ளார் அவற்றை இந்த செய்தி தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
சினிமாவில் நடிக்க 500 ரூபாய் முன் பணம் கேட்டார்கள் :-
சினிமாவில் நான் நடிப்பதற்கு என்னை விட என் அப்பாவிற்கு தான் ஆசை அதிகம். அப்பொழுது தான் நான் சிறுவயதில் இருக்கும் போது செய்தித்தாள்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற செய்தியை பார்த்து என் புகைப்படத்தை அனுப்பி அதற்கு அப்ளை செய்தார் சிறிது நாட்களில் அதற்கு மறுபடியும் சென்னைக்கு வாருங்கள் என்று பதிலும் அனுப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் எனக்கு சென்னை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாக இருந்தது ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் இது போன்ற சிறு சிறு ஆசைகளும் இருந்ததால் நானும் என் அப்பாவும் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டோம். சென்னை வந்தவுடன் திருவெற்றியீர் தாண்டி அந்த ஆபீஸ்க்கு சென்றோம் ஆனால் அவர்களோ ஒரு ரூபாய் ஒரு 500 ரூபாய் முன் பணம் கட்ட சொன்னார்கள். ஆனால் 2004 அந்த சமயத்தில் 500 ரூபாயை அதிகமான பணம் நாங்கள் கொண்டு வந்ததே மொத்தத்துக்கு 500 ரூபாய் தான் அதனால் எங்கள் சொந்தக்காரர்களிடம் கொடுத்து அனுப்புகிறோம் என்று வந்து விட்டோம்.
எனக்கு அடைக்களம் கொடுத்தது பாக்கியராஜ் சார்தான் :-
அதன்பின்பு என் தந்தை வா பாக்யராஜ் சார் ஆபீஸ் போலாம் என்று என்னை கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு பாக்யராஜ் சாரை சென்று சந்தித்த பொழுது உனக்கு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்டார் கம்ப்யூட்டர் வேலை தெரியும் டிபி, கம்ப்யூட்டர் டெவலப்பிங் கோர்ஸ் இதெல்லாம் படித்து இருக்கிறேன் என்று கூறினேன். அவரும் செய்து காட்டு என்று சொன்னார் நானும் போட்டோஷாப் சிஸ்டம் ஒர்க்கு எல்லாம் செய்து காட்டினேன். அவர்களும் நான் பன்னுகிறான் சார் என்று அவரிடம் கூறினார்கள். பாக்யராஜ் சார் என்னிடம் சென்னையில் தங்க வேண்டுமென்றால் ஒரு வேலை வேண்டும் அதிலும் சினிமாவை மட்டும் நம்பி சினிமாவில் நடிப்பதற்காக காத்திருக்க முடியாது. நீ இங்கேய தங்கி வேலைகளை செய் சினிமா வாய்ப்பு வரும்போது சினிமாவில் நடிக்க செல் என்று எனக்கு அடைக்களம் கொடுத்தது எனது குரு பாக்யராஜ் சார் தான் என்று சங்கர் கூறினார்.
சினிமா வாய்ப்பு :-
அதன் பின்பு பாக்யராஜ் சார் அலுவலகத்தில் வேலை பார்க்க தொடங்கி விட்டேன் அப்போது லிங்குசாமி சார் பாக்கியராஜ் சாரை படம் சம்பந்தமாக சந்திப்பதற்கு ஒரு முறை வந்தார். அப்பொழுது பி.ஆர்.ஓ ஒருவர் என்னை லிங்குசாமி அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். சார் இவன் இங்கு தான் வேலை பார்க்கிறான் படத்தில் நடிப்பதற்காக வந்திருக்கிறான் உங்களது படத்தில் வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என்று கூறினார். லிங்குசாமி சாரும் பார்த்து விட்டு நேரடியாக டைரக்டர் இடம் போய் இந்த படத்தில் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் கேரக்டருக்கு ஒருவர் தேவைப்படுகிறார் இந்த பையன் சரியாக இருப்பான் அவன் இங்கு தான் வேலை பார்க்கிறானாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆமாம் சினிமாவில் நடிப்பதற்காக தான் வந்திருக்கிறான் கூட்டி செல்லுங்கள் என்று என அனுப்பி வைத்து விட்டார்.
அஜித் உடன் பட நடித்த அனுபவம் :-
அதன் பிறகு ஜி படத்தில் அஜித்குமார் சார் அவருடன் நடித்தேன். சூட்டிங் வந்து பொழுது அஜித் சார் என்னிடம் வந்து ஹாய் கியூட் பாய் என்ன படிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு மணிவண்ணன் சார் என்ன படிக்கிறான் என்று கேட்கிறீர்கள் அவனுக்கு 18 வயதாம் சார் என்ற அஜித் சாரிடம் சொன்னார். பின்பு அஜித் சார் சாக்கான ரியாக்சனுடன் என்னை பார்த்தார். அதன் பின்பு அஜித் சார் கூடவே படம் பண்ணிட்ட எங்களுடம் வந்து படம் பண்ணு என்று வல்லவன் படத்தில் சிம்புவுடன் ஒரு 40 நாள் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. பிறகு பிப்ரவரி 14 படத்தில் பரத் அவர்களின் மனசாட்சி பேசுவது போன்று பொம்மை ஒன்று இருக்கும். அந்த படம் முழுவதும் அந்த பொம்மைக்கு டப்பிங் செய்தது நான் தான் அதர் பின்பு கருப்பசாமி குத்தகைக்காரர் என வடிவேல் சாருடன் நடித்த காமெடி காட்சி பிரபலமானது. மறுபடியும் வடிவேல் சார் உடன் இனைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் எனக்கு மிகபெரிய வெற்றியை கொடுத்தது.
ஆரம்பகாலத்தில் அதை பார்க்கும் போது சங்கடமாக தான் இருந்தது :-
அதன் பின்பு சமீப காலமாக யூடியூப் சேனல்கள் பலவற்றில் தற்போதைய அம்பானி சங்கரின் நிலைமை, தற்போது அம்பானி சங்கர் என்ன செய்கிறார், பரிதாபமான நிலையில் சங்கர் என்று தம்நெயில் உடன் வீடியோக்கள் போடுவார்கள். ஆரம்ப காலத்தில் அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது மிகவும் சங்கடமாக தான் இருக்கும். பிறகு அது அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டேன் அந்த வீடியோக்களில் உள்ளே சென்று பார்த்தல் என்னைப் பற்றிய நல்ல விஷயங்களாக பேசி இருப்பார்கள் ஆனால் தம்நெயில் பார்வையாளருக்காக அப்படி வைத்திருப்பார்கள். இப்படியாக சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த நான் சினிமா வாய்ப்புகள் குறை தொடங்கியவுடன் எங்களுக்கென்ற தனியாக யூடியுப் சேனல் ஆரம்பித்து அதில் சிறுசிறு கண்டன்டுகள் போட்டு வருகிறோம். என்று அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அம்பானி சங்கர்.