சினிமாவாவிற்கு முன் அப்புக்குட்டி என்ன வேலை செய்துள்ளார் பாருங்க.! இத்தனை கஷ்டமா.!

0
2049
appu-kuttie
- Advertisement -

அஜித் அவர்களின் வீரம் படத்தில் ‘தம்பி மயில்வாகனம்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதில் பரவலாக அறியப்பட்டவர் அப்புக்குட்டி. அப்புகுட்டி உண்மையான பெயர் சிவபாலன் ஆகும். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். இவருடைய வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமி குதிரை ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கில்லி, அழகிய தமிழ் மகள், மதராசபட்டினம், குள்ளநரிக்கூட்டம், மரியான், வேதாளம் போன்ற பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
appu-kutty

ஆனால், இவரை மக்களிடையே அதிக அளவு தெரிய வைத்தது “வெண்ணில கபடி குழு, அழகர் சாமியின் குதிரை” படம் தான். இப்படி திரை உலகில் நடித்துக் கொண்டிருக்கும் அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நடந்த சோகமான கதையை கூறியதன் மூலம் பலர் மனதையும் கலங்க வைத்தது. மேலும், அப்புக்குட்டி “வாழ்க விவசாயி” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அப்புக்குட்டி தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை குறித்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். அந்த இசை வெளியீட்டு விழா மேடையில் அவர் கூறியது, வாழ்க விவசாயி என்ற படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது என் மனதில் தோன்றியது எல்லாம் ஒன்றுதான்.

இதையும் பாருங்க : தர்ஷன் சனம் ஷெட்டியை காதலிக்கிறாரா இல்லையா ? தர்ஷன் குடும்பத்தை சேர்த்தவரே சொல்லிட்டார்.!

- Advertisement -

என் அம்மாவே நேரில் வந்து என்னை பார்த்தது போல இருந்தது எனக்கு. எங்க சொந்த ஊரில் எங்களுக்கு விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாயத்தில் கூலி தொழில் செய்பவர்கள் தான்.எங்களுக்கு விவசாய நிலம் இருந்து இருந்தால் விவசாயம் செய்தோ அல்லது ஆடு, மாடுகளை மேய்த்தோ என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து இருப்பேன். ஆனால், வறுமையில் கஷ்டப்பட்டு வாழுகின்ற ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பதில் பிறந்தவன் . ஒரு வேளை சோறுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருக்கிறேன்.

Image result for appu kutty

எங்க அம்மா எங்களுக்கு ஒரு வேளை சோறு போட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டு அழுந்த நாட்கள் தான் அதிகம். அப்போதான் என் மனதில் தோன்றியது ஏன்? நம்ம கஷ்டப்பட்டு இருக்கோம். சென்னைக்கு போய் வேலை தேடி பிழைக்கலாம் என்று நினைத்து தான் சென்னைக்கு வந்தேன் என்று கூறினார்.மேலும், நான் இந்த படத்துக்கு சம்மதம் சொன்னதற்கு காரணம் விவசாயிகள் நிலை நாளுக்கு நாள் ரொம்ப மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. விவசாயம் அழிந்து கொண்டே வருகிறது. மேலும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

-விளம்பரம்-

விவசாயிகள் கஷ்டத்தை எப்படியாவது மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த கதைக்கு சரி என்று ஒத்துக் கொண்டேன். ஆனால், இந்த படத்தில் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் யாரும் முன்வரவில்லை தயங்கி நின்றார்கள். ஏன் தயங்கி நின்றார்கள்? என்று எனக்கு புரியவில்லை. என்னை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு நான் கொடூரமாக உள்ளேன! என்று மேடையில் பேசிய அவருடைய பேச்சு பலரையும் கண்கலங்க வைத்தது. அப்புகுட்டி குழந்தைபோல் மேடையிலேயே அழத் தொடங்கினார். மேலும் இவருடைய பேச்சும் பல பிரபலங்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement