தர்ஷன் சனம் ஷெட்டியை காதலிக்கிறாரா இல்லையா ? தர்ஷன் குடும்பத்தை சேர்த்தவரே சொல்லிட்டார்.!

0
75687
tharshan
- Advertisement -

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களின் சாண்டிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது தர்ஷன் தான். அதிலும் இவர் வனிதாவிடம் எதிர்த்து பேசியதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றார். இலங்கை மாடலான தர்ஷன் சில படங்களிலும் நடித்துள்ளார்.தர்சனுக்கு ஷணம் ஷெட்டி என்ற ஒரு காதலி இருக்கிறார் அவரும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -
Related image

மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : இறுதி போட்டியை நெருங்கியுள்ள போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை.! விரிவான பிளாஷ் பேக்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது இன்னும் சில நாட்களில் இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்று தெரிய வரும் நிலையில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறி இருந்தார் தர்ஷினியின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பிக்பாஸ் குழுவையும் விஜய் தொலைக்காட்சியும் கடுமையாக விமர்சித்து வருகிறது.மேலும் முதல் மூன்று இடத்தில் தர்ஷன் வருவார் என்று ஆணித்தனமாக நம்பிய ரசிகர்கள் தர்ஷன் எப்படி வெளியேறினார் என்ற காரணத்தை எண்ணி புலம்பி வருகின்றனர.

-விளம்பரம்-
https://twitter.com/venkyarun007/status/1179595394105217024

தர்ஷன் வெளியேறியதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியுள்ள சனம் ஷெட்டி பலபேர் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று நம்பினார்கள். ஆனால், அவர் எப்படி வெளியேறினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்களைவிட அவர் குறைவான ஓட்டுகளை பெற வாய்ப்பே கிடையாது. கவின் ஆதரவாளர்கள் கூட லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்து இருக்கலாம். ஆனால், ஷெரின் எப்படி தர்ஷனை விட அதிக ஓட்டுகள் வாங்கினார் என்பதுதான் தெரியவில்லை. அது எனக்கு மிகவும்மர்மமாக இருக்கிறது வெளியேறினால் கூட தர்ஷனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் வனிதா, தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இப்படி தர்ஷன் விஷயத்தில் பல்வேறு குழப்பங்கள் பொய் கொண்டு இருக்கும் நிலையில், உண்மையில் தர்ஷன் சனம் ஷெட்டியை காதலிக்கிறாரா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். மேலும், தர்ஷனுக்கு இதுவரை சனம் ஷெட்டியை காதலிப்பதாக இதுவரை குறைவே இல்லை. இருப்பினும் சமீபத்தில் சனம் ஷெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் என்னையும் தர்ஷனையும் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தர்ஷனின் சகோதரர், தர்ஷனுக்கு காதலி இருக்கிறாரா இல்லையா என்பதை கூறியுள்ளதாக ரசிகர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தர்ஷன் யாரையும் காதலிக்கவில்லை என்றும் அவருக்கு எந்த காதலியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது உண்மையில் தர்ஷன் சகோதரர் செய்த உரையாடல் தானா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும் சனம் ஷெட்டி விஷயத்தில் தர்ஷன் வாய் திறந்தாள் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement