அர்ஜுன் வீட்டில் நேர்ந்த மாபெரும் இழப்பு – ஆக்ஷன் கிங்கிற்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

0
979
Arjun
- Advertisement -

நடிகர் அர்ஜூனின் தாயார் மரணமடைந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜுன் திகழ்கிறார். இவர் 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு 90ஸ் முதல் 2K கிட்ஸ் என அணைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக அர்ஜுன் இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் 90ஸ் காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும்.

- Advertisement -

நடிகர் அர்ஜுனின் திரைப்பயணம்:

இதனாலே அவருடைய படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார். தற்போது படங்களில் அர்ஜுன் அவர்கள் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். சமீபத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சி சர்வைவர்.

அர்ஜுன் நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து அர்ஜுன் தற்போது தமிழ் படங்களிலும், ஒரு மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

அர்ஜுனின் அம்மா மரணம்:

இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அர்ஜூனின் அம்மா இறந்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் அர்ஜூனின் அம்மா லட்சுமி தேவி. இவர் இன்று பெங்களூரில் காலமானார். இவருக்கு தற்போது 85 வயதாகிறது. பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்திருந்த லக்ஷ்மி தேவி இன்று காலம் ஆகி இருக்கிறார்.

இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்:

பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. தாயார் மரணம் மற்றும் இறுதி சடங்கு பற்றி அர்ஜுன் குடும்பம் இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜூனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமாகி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அர்ஜுனின் வீட்டில் ஒரு துக்க சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement