ரோட்டோர கடையில் அருண் விஜய் செய்த வேலைய பாருங்க..! வாழ்த்தும் ரசிகர்கள்

0
1315
actor arun vijay

சினிமா பிரபலங்களில் எங்கு சென்றாலும் ஒரு வகையான பந்தங்களுடன் தான் செல்வார்கள். ஆனால் ஒரு பிரபலமான நடிகரின் மகனாக இருந்தும் நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.அருண் விஜய் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் சமீப வருடங்களாக தான் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பதிந்தது. மேலும் இவர் நடித்த தடையற தாக்க படம் இவருக்கு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி தந்தது.

மேலும் இவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற படத்திலும் அஜித்திற்கு வில்லனாக நடித்து அசத்தினார். சமீபத்தில் இவரது படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் சென்னையில் உள்ள ஒரு ரோட்டோர உணவகம் ஒன்றில் எடுக்க கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அந்த உணவகத்தின் அடுப்படி பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் அருண் விஜய் தமக்கான ஆம்லெட் ஒன்றை தாமே சமைத்துக் கொண்டிருக்கிறார். அருண் விஜயின் இந்த எளிமையை கண்டு அவரது ரசிகர்கள் அவரை ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.