நடிகர் ஆர்யாவின் உண்மையான பெயர் இது தானா ? இது தெரியுமா உங்களுக்கு.

0
3800
arya-sayyesha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அஜித் – ஷாலினி, சூர்யா- ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று பல்வேறு நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அந்த வகையில் இதே லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தவர்கள்தான் ஆர்யா மற்றும் சாயிசா ஜோடிகள். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் ஆர்யாவை சயிஷாவிற்கு திருமணம்செய்து வைக்க ஆயிஷாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் , இவர்களது திருமணம் செய் சாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதையும் பாருங்க : டான்ஸ் ஆட அனுப்பினா அவங்க ரெண்டு பேரும். என்னத்த சொல்ல. புலம்பும் நடிகர் பரத்.

- Advertisement -

கடந்த மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் ஊர் ஊரக ஜாலியாக சுற்றித்திரிந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். அப்போது அங்கே இருவரும் சைக்கிளில் ஜாலியாக ஊர் சுற்றிய புகைப்படங்களை சயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சயீஷா அமர்ந்திருந்த சைக்கிளுக்கு பின்னால் சயீஷா என்ற அவருடைய பெயர் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், ஆர்யா வைத்திருந்த சைக்கிளில் ‘ஆர்யா’ என்ற அவருடைய பெயருக்கு பதிலாக ‘ஜம்ஷட்’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆம், ஆர்யா உண்மையான பெயர் Jamshad Cethirakath-ஆம். படத்தில் நடிப்பதற்காக தான் தனது பெயரை ஆர்யா என்று மாற்றியுள்ளாராம். இந்த விஷயம் பல பேருக்கு தெரியாத ஒன்று தான். இது ஒருபுறம் இருக்க ‘ஜெயம் ரவி நடித்த மிருதன்’, ‘டிக்.டிக்.டிக்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் புதிதாக எடுக்கவிருக்கும் படம் ‘டெடி’. படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே இந்த படத்தில் கரடியும் நடிக்கிறதாம். இந்த படத்தில் ஆர்யா நடிக்க ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவிருக்கிறாராம்.

-விளம்பரம்-

Advertisement