முரளியின் கடைசி தருணம் குறித்து பட விழாவில் கண்கலங்கிய அதர்வா- வைரலாகும் வீடியோ

0
333
- Advertisement -

முரளியின் கடைசி தருணம் குறித்து மனம் திறந்து நடிகர் அதர்வா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவரை அதிகம் ‘இதயம் முரளி’ என்று தான் அழைப்பார்கள். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவின் கருப்பு வைரமாக இருந்து வந்த முரளி கடந்த 2010ஆம் ஆண்டு யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

-விளம்பரம்-

இவரின் இழப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதாவது முரளி அவர்கள் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும். காவியா என்ற மகளும் உள்ளார்கள். அதில் முரளியின் மூத்த மகன் அதர்வா தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை.

- Advertisement -

ஆகாஷ் நடிக்கும் படம்:

இருந்தும் இவர் விடாமுயற்சியுடன் படங்களில் நடித்துக் கொண்டு வருகின்றார். இந்த நிலையில் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நேசிப்பாயா’. இந்த படத்தில் ஆகாஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

பட விழாவில் அதர்வா:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா நேற்று நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் ஆகாஷின் அண்ணனும், நடிகருமான அதர்வா முரளி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், இந்த நாள் என்னுடைய குடும்பத்திற்கு ரொம்ப சந்தோஷமான நாள். தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

ஆகாஷ் குறித்து சொன்னது:

அதேபோல், ஆகாஷ் உடைய கனவை நிறைவேற்றிய இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கும் நன்றி சொல்கிறேன். என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான் தம்பியின் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். நான் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது என்னுடைய அப்பா முரளி இருந்தார். அவருடைய மனநிலை அப்போது என்னவாக இருந்தது என்று தெரியவில்லை. இன்று ஆகாஷ் மேடையில் இருக்கும் போது நான் கீழே இருக்கிறேன். அப்பாவுடைய மனநிலையை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.

முரளி கடைசி தருணம்:

என்னுடைய அப்பா இறந்தபோது என்னுடைய வீட்டில் எல்லோருமே உடைந்து போய் விட்டோம். அப்போது ஆகாஷ் சின்ன பையன். அவன் என்னுடைய கையைப் பிடித்து இருந்தான். அவனுக்கு அப்போது என்ன நடக்கிறது என்று புரிகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. அவன் முன்னாடி அழக்கூடாது என்று இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் உடைந்து அழுதுவிட்டேன். அப்போது அவன், அம்மாவை நாம நல்லா பாத்துக்கலாம் என்று எனக்கு தைரியம் சொன்னான். இன்னைக்கு அவன் ஹீரோவாக வந்திருக்கிறான். எங்க அப்பா முரளிக்கும், எனக்கும் எவ்வளவு ஆதரவு கொடுத்தீர்களோ, அதே அன்பையும் ஆகாஷுக்கு தரவேண்டும் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement