துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரம் சிக்கி தவித்த அதர்வா. காரணம் இது தான்.

0
14843
atharva
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் முரளியின் மகன் ஆவார். நடிகர் அதர்வா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெங்கடேஷ் தயாரித்து இயக்கி வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி, இரும்புக்குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங், 100 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். கடந்த ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான “100” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் அதர்வா அவர்கள் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
rain-in-dubai

- Advertisement -

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி உருவாகும் கதை ஆகும். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மேலும், மசாலா பிக்ஸ் நிறுவனமும், எம்.கே.ராம்பிரசாத்தின் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் அதர்வா அவர்கள் phd பட்டதாரியாகவும், அனுபமா அவர்கள் பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே நடிகர் அதர்வா அவர்கள் கண்ணன் இயக்கத்தில் பூமராங் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : சமீபத்தில் பிறந்த தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நிஷா. குயூடான கைக் குழந்தையின் புகைப்படங்கள்.

இந்த படம் ஆக்ஷன், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் இந்த படத்தில் அதர்வா நடித்து இருக்கிறார். இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரை அரங்கில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான்(Azerbaijan) என்ற நாட்டில் துவங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அதர்வா அவர்கள் சனிக்கிழமை விமானத்திற்கு சென்று உள்ளார்.

-விளம்பரம்-

இவர் துபாயிலிருந்து, அசர்பைஜான்(Azerbaijan) நாட்டிற்கு connecting flightல் செல்ல இருந்தது. ஆனால், துபாயில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் 24 மணி நேரத்திற்கு மேலாக அதாவது ஒரு நாளுக்கு மேலாக அதர்வா அவர்கள் துபாய் விமான நிலையத்திலேயே இருந்து உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. அதற்கு பிறகு தான் இவர் நேற்று சென்ற விமானத்தில் தான் அசர்பைஜான்(Azerbaijan) நாட்டிற்கு சென்று உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

Advertisement